Tuesday, May 2, 2023

ஏலக்காய் ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய்

 ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய்

ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய்! காகத்திற்கு இதை மட்டும் வைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். கோடிகள் குவியம்.

இதை ஒரு பரிகாரம் என்று கூட நீங்கள் நினைத்து செய்ய வேண்டாம். வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுப்பதாக நினைத்து செய்தால் போதும். வாழ்க்கையில் இருக்கும் அத்தனை விதமான கஷ்டங்களுக்கும் ஒரு விடிவுகாலம் கூடிய சீக்கிரத்தில் பிறக்கும். நிறைய பேர் வாழ்க்கையில் கஷ்டங்கள் எதனால் வந்தது என்றே தெரியாது. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ, இந்த ஜென்மத்தில் மனித பிறவி எடுத்து கஷ்டத்தை அனுபவிக்கின்றோம், என்று நூற்றுக்கு, 90 சதவீதம் பேர் வாயில் நிச்சயமாக வரும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த ஒரு பக்தி சார்ந்த பரிகாரத்தை செய்யலாம். செய்த பாவத்திற்கு கிடைத்த பரிசு தான் சாபம்.*

பாவம் நீங்க காகத்திற்கு வைக்க வேண்டிய உணவு:*

வாழ்வில் வற்றாத செல்வம் கிடைக்க, வருமானம் பெருக, வீட்டில் இருக்கக்கூடிய சின்ன பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சனை வரை ஒவ்வொன்றாக எல்லாம் சரியாக, காகத்திற்கு ஏலக்காய் கலந்த உணவை வைக்க வேண்டும். ஏலக்காயை அப்படியே கொண்டு போய் முழுசாக வைத்தால் காகம் எடுத்து சாப்பிடாது. ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தோலுடன் போட்டு ஏலக்காயை பொடி செய்து கொள்ளலாம். இந்த ஏலக்காய் தூளை குறிப்பாக உளுந்து வடையில் கலந்து இனிப்பு வடையாக செய்து காகத்திற்கு வைக்கலாம். வடையை சின்ன சின்னதாக கிள்ளி காகத்திற்கு வைத்து விடுங்கள். காகம் விருப்பமாக வந்து இந்த வடையை சாப்பிட சாப்பிட உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். (உங்கள் வீட்டு மொட்டை மாடியில் மற்ற பறவைகள் வந்து இந்த உணவை எடுத்தாலும் தடுக்காதீங்க. மற்ற பறவைகள் சாப்பிட்டாலும் தவறு கிடையாது.)

பொதுவாகவே முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற தயிர் சாதத்தை காகத்திற்கு வைக்கலாம் என்று சொல்லுவார்கள். அந்த தயிர் சாதத்தோடு இந்த வடையை சேர்த்து காகத்திற்கு வைப்பது இன்னும் சிறப்பு. ஏலக்காய் வாசம் நிறைந்த வேறு எந்த பொருளை காகத்திற்கு வைத்தாலும் அது குடும்ப கஷ்டத்தை குறைக்கும். வீட்டிலேயே உங்கள் கையால் அந்த உணவை சமைத்து வைக்க வேண்டும்.*

குறிப்பாக இந்த பரிகாரத்தை அமாவாசை தினத்தன்று செய்தால் முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசை அல்லாது மற்ற நாட்களிலும் ஏலக்காய் சேர்த்த உணவு பொருளை காகத்திற்கு வைக்கலாம். தவறு கிடையாது. இதன் மூலம் உங்களை பின்தொடரும் பெண் சாபம், விதவை சாபம், பூமி சாபம், பிரேத சாபம், குலதெய்வ சாபம், என்று 13 வகையான சாபங்களில் எது உங்களுடைய ஜாதக கட்டத்தில் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி இந்த சின்ன பரிகாரத்திற்கு உண்டு.

ஏலக்காய் கலந்த பலகாரத்தை காகத்திற்கு வைப்பதன் மூலம் நமக்கு அதிக செலவும் கிடையாது. இதன் மூலம் புண்ணியத்திற்கு புண்ணியமும் சேரும். செய்த பாவத்திற்கான கணக்குகளும் படிப்படியாக கழியும் என்பது நம்பிக்கை. முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் கையாலும் இதை காகத்திற்கு கொண்டு போய் வைக்கலாம். ஆனால் எச்சில் படுவதற்கு முன்பு முதலில் காகத்திற்கு இந்த உணவை வைத்து விடுங்கள்.*

இப்படி எத்தனை நாட்கள் உங்களால் செய்ய முடியுமோ, எப்போதெல்லாம் இதுபோல காகத்திற்கு ஏலக்காய் சேர்த்த உணவை வைக்க முடியுமோ அப்போதெல்லாம் வைத்துக் கொண்டே இருங்கள். வளமான வாழ்வு நிரந்தரமாக உங்களுடனே இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காமல் தக்க சமயத்தில் கை தூக்கி விட ஒரு வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொண்டே இருக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.