இஞ்சியை இப்படி சாப்பிடுங்க... உங்களுக்கு இத்தனை வியாதிகளும் போயே போச்சு...!
எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைச்சிக்கிட்டே இருக்கும். அதுவும் 40 வயதைத் தாண்டினால் நம் உடலுக்கும் நமக்கும் பெரிய போராட்டமே நடக்கும். தினமும் உயிரோடு இருந்தாலே அது பெரிய வெற்றி என்ற கதையாக மாறிவிடும். ஆனால் பழைய காலம் மாதிரி இப்போ கிடையாது. விழிப்புணர்வு அதிகம். உள்ளங்கையில் உலகம் இருக்கு.
என்ன பிரச்சனை? என்ன சந்தேகம்னாலும் உடனே நெட்டைத் தட்டினால் அதுக்கான பதில் வரப்போகுது. போக்குவரத்து வசதியும் இருப்பதால் எங்கே வேணாலும் உடனே போய்விடலாம். ஆனா ஆபத்துக்கு உதவுறது வீட்டில இருக்கும் மருந்துகள் தான்.
அதையே நாம் அடிக்கடி உணவு வகையறாக்களில் சேர்த்து சாப்பிடும்போது பல வியாதிகளும் நம்மை அண்டவே அண்டாது. அந்த வகையில் இன்று இஞ்சி என்ற அந்த மாமருந்தைப் பற்றி மட்டும் பார்ப்போம். இதை இப்படி சாப்பிட்டால் இவ்ளோ வியாதிகளும் வராதாம். வாங்க பார்ப்போம்.
1. இஞ்சி சாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
No comments:
Post a Comment