ஜவ்வு மிட்டாய்…
·
ஜவ்வு மிட்டாய் 90-களில் குழந்தைகளின் விருப்பத்திற்குரிய மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு மிட்டாய்.
·
90s கிட்ஸ்களின் விருப்பமான மிட்டாய்கள் சிறிது சிறிதாக மறைந்து வரும் நிலையில், அதில் மிக முக்கியமான விருப்ப மிட்டாயான ஜவ்வு மிட்டாய் எனப்படும் பம்பாய் மிட்டாய் வேகமாக மறைந்து வருகிறது.
·
இந்த ஜவ்வு மிட்டாய் தான் அன்றைய கால குழந்தைகளின் விருப்பமான மிட்டாய்.
·
பார்ப்பதற்கு பல வண்ணங்களில் வரிவரியாக நீளும் தன்மையுடைய இந்த மிட்டாயின் சுவைக்கு ஈடு இனை கிடையாது.
·
இந்த மிட்டாயை மொத்தமாக மூங்கிலில் எடுத்துக்கொண்டு அதன் மேல் பல வண்ணங்களில் ஆடையணிந்த பொம்மைகளை வைத்து வியாபாரிகள் தெருக்களில் விற்பனை செய்ய வருவர்.
·
இது சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது.
·
இது பொதுவாக இளஞ்சிவப்பு (Pink) அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
·
இதை கைகளில் வைத்து இழுக்கும் போது 'ஜவ்வு' போல நீளமாக வரும்.
·
குழந்தைகள் இந்த மிட்டாயை பல வடிவங்களாக (மோதிரம், பூ, பொம்மைகள்) மாற்றி விளையாடுவார்கள்.
·
அதனாலேயே அன்றைய 90s குழந்தைகள் இந்த ஜவ்வு மிட்டாயை விரும்பி வாங்கி சாப்பிட்டனர்
·
தமிழகத்தின் கிராமப்புறங்களிலும், திருவிழாக்களிலும் ஒரு சில இடங்களில் இந்த ஜவ்வு மிட்டாய் விற்கப்படுகிறது.[
No comments:
Post a Comment