Followers

Sunday, June 14, 2026

ஸ்ரீராமானுஜர்

ஸ்ரீராமானுஜர்


ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் கொண்டு அபிசேகம் செய்து வருகிறார்கள்

இந்த செய்தி அருகில் திருச்சியில் உள்ள இந்துக்களுக்கே தெரியாது. ..

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை. அப்படியே ஸ்ரீராமனுஜர் சன்னதியை பார்ப்பவர்கள்

ஸ்ரீராமானுஜர் பூத உடல் என்று அறிவது இல்லை, சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து போகிறார்கள் தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

உயிர் பிரிந்த உடனே: தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது:

தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்:

இராமானுசன் என்தன் மாநிதி

என்றும் இராமனுசன் என்தன் சேமவைப்பு என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி.

இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி.என்று பெயர்.

உய்ய ஒரே வழி....

உடையவர் திருவடி....

ராமானுஜரின் பூதவுடலை திருக்கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்திருப்பது ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோவிலுக்கு இழுக்கு இல்லையா?

உங்களுடைய சந்தேகம் நியாயமான சந்தேகம். ஆனால் சாதாரண பாமர மக்களாக பிறந்திருக்கும் நம்மை போன்றவர்களது உடல் நாம் இறந்த பிறகு எங்கு புதைக்கவோ எரியூட்டவோ படவேண்டும் என்பதும் இந்த ஆகம விதிமுறைகளை சார்ந்திருக்கும். ஆனால் இராமானுசர் போன்றவர்களது பூதவுடல் இந்த வரம்பிற்குள் வராது. அன்னார் போனறவரது பூதவுடலை அப்படி அழைக்க கூட மாட்டார்கள்.

அதற்கு பதிலாக "திருமேனி" என்று அழைப்பது வழக்கம். ஏனெனில் இராமானுசர் தனது திருமேனியை விடுத்து அமரத்தன்மை எய்தி விட்டார் என்ற நிகழ்வின் போது திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள இறைவன் அவரது திருமேனியை எங்கும் வெளியே வைத்து அந்திம கிரியைகள் செய்வதில் உடன்பாடு இல்லையென்றும் தனது அரண்மனை தோட்டத்து முற்றத்திலேயே பளளிப்படுதத வேண்டும் என்றும் அர்ச்சகர் மூலமாக ஆவேசக்குறிமூலமாக கட்டளை இடட்தாகவும் தலபுராணங்கள் அறிவிக்கிறது.

அப்படி என்ன இறைவனுக்கு இராமானுசரிடத்தில் பரிவு எனில் "இறைவனாகிய தான் அனைவருக்கும் பொது என்பதையும் சாதி வேறுபாடுகள் சார்ந்த ஏற்ற தாழ்வுகளை ஒருபோதும் தனது பக்தர்கள் இடையே தான் அனுமதித்தது இல்லை என்பதை ஒரு அவதாரத்தின் மூலமாக நிரூபணம் செய்ய இறைவன் கருதியதால் இராமானுசர் அவதாரம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் தாண்டி மனித குலத்திற்கு வழிகாட்டியாக வாழ்ந்து இயற்கை எய்தினார் இராமானுசர்.

அதனால்தானோ என்னவோ சாதி சமூக கட்டமைப்பு மூலமாக ஏற்பட்ட தவறான முன்னுதாரணம் பலவற்றை எதிர்த்து சமூகநீதியை நிலைநாட்ட இந்நாளில் அரசியல் ரீதியாக போராடிய பல தலைவர்களில் முக்கியமான தலைவர் முத்தமிழ் வித்தகர்

திரு கருணாநிதி அவர்கள். அவரது உள்ளத்தையே உருக வைத்தவர் இராமானுசர்.

அதனாலேயே தொலைக்காட்சி மூலமாக இந்த புனிதரின் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சித்தது ஒன்றே ஒரு முக்கிய சான்று. இன்றைய தேதியில் வரும் ஆத்திகர்கள் கருத்தை கவருவதற்காக அங்கிருக்கும் அர்ச்சகர்கள் இதை அப்படியே சொல்வதாக நினைத்து இதை கொச்சையாக சொல்கிறார்கள்.

அந்த இடத்தில் கீழே இராமானுசர் திருமேனி பள்ளிப் படுத்தப் பட்டு( பாமரர்கள் என்றால் புதைக்கப்படுதல் என்று கூறுதல் என கொள்ளவும்) அதன் மேலே இராமானுசரது திருவுருவச் சிலை ( விக்ரகம் என்று புனிதமாக புனிதர்கள் சிலையை வடமொழியில் அழைத்தல்) அமைக்கப் பட்டது என்பது சான்றோர் கூற்று. அரங்கன் பள்ளி கொண்டுள்ள திருச்சுற்று மட்டுமே ஆலயம்.

இராமானுஜர் பள்ளிப் படுத்த பட்டிருக்கும் ( பள்ளி கொள்வது என்பது பள்ளிப் படுத்தல் என்பதில் வேறுபடும்) திருச்சுற்று ஆலயத்தின் தோட்ட வளாகம். ஆதலின் அது ஆகம விதியை இடராத ஒரு இடம். இவையெல்லாம் பாமர அர்ச்சகர்கள் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு தெரியாது.

No comments:

Post a Comment