Followers

Sunday, March 23, 2025

கல்யாணத்திற்க்கு முன்னால் நினைத்தது நடக்காது

 எல்லோருக்கும் கல்யாணத்திற்க்கு முன்னால் நினைத்தது எதுவும் நடக்காது


1. கல்யாணத்திற்க்கு பிறகு நீங்க எதிர்பார்த்த கனவுலக வாழ்க்கை இருக்காது. பல ஏமாற்றங்கள் இருக்கும்.

2.
கல்யாணத்திற்க்கு முன்னால் பணத்தின் முக்கியத்துவத்தை பற்றி கவலை பட்டு இருக்க மாட்டீர்கள். ஆனால் கல்யாணத்திற்க்கு பிறகு பணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள்.

3.
திருமணத்திற்க்கு முன்னால், உங்கள் வாழ்க்கைத்துணையின் எல்லா குணங்கள், செய்கைகள் பிடித்து இருக்கும். திருமணம் செய்த பிறகு, வாழ்க்கை துணையின் பல விஷயம் பிடிக்காது.

4.
காதல் வயபட்ட போது  வாழ்க்கை துணையை பிரிந்து இருப்பது நரகமாக இருக்கும். கல்யாணத்திற்க்கு பிறகு இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவரவர்கள் வேலையை பார்த்து கொண்டு இருப்பீர்கள்.

5.
கல்யாணத்திற்க்கு முன்னால் உங்கள் வாழ்க்கைத்துணையின் குடும்பத்தை உங்கள் குடும்பமாக பாவிப்பீர்கள். கல்யாணத்திற்க்கு பிறகு அவர்களை வேற்று மனிதராக கருதுவீர்கள்.

6.
கல்யாணத்திற்க்கு முன்னால் பேசுவதற்க்கு நிறைய இருக்கும். கல்யாணத்திற்க்கு பிறகு பேசுவதற்க்கு தயக்கம் காட்டுவீர்கள்.

7.
கல்யாணத்திற்க்கு முன்னால், உங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்த நாட்களை விழாவாக கொண்டாடுவீர்கள். கல்யாணத்திற்க்கு பின்னால் பிறந்த நாள் எதுவென்று மறந்து போகும்.

8.
கல்யாணத்திற்க்கு முன்னால், சண்டைக்கு பிறகு உடனே சமாதானம் ஆகி விடுவீர்கள். கல்யாணத்திற்க்கு  பிறகு, லேசில் சமாதானம் அடைய மாட்டீர்கள்.

9.
கல்யாண வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் தான் இருக்கும் என்ற உங்கள் கனவு, கல்யாணத்திற்க்கு பிறகு தவிடுபொடி ஆகிவிடும்.

10.
கல்யாணத்திற்க்கு முன்னால அனுசரணையாக நடக்கும் நீங்க, கல்யாணத்திற்க்கு பிறகு பல தடவை உங்கள் வாழ்க்கை துணைக்கு அதே அனுசரணையை காட்ட மாட்டீர்கள்.

இது பல கல்யாண வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தம். கற்பனைகளை ஓரம் கட்டி விட்டு, பொறுப்புகளை சுமக்க தயாராக வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையை, அவர்களின் நிறை குறைகளோடு அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். ஆயிரம் உறவுகள் உங்களை சுற்றி இருந்தாலும், உங்கள் வாழ்க்கை துணை தான் உங்களுடன் இறுதி வரை பயணிக்க போறாங்க என்ற உண்மையை உணர்ந்தாலே போதும், கல்யாண வாழ்க்கையின் அழகை புரிந்து கொள்வீர்கள்.

 

திருமணம் பற்றிய மிகவும் மோசமான உண்மைகள் என்னென்ன?
என்னுடைய சுற்றத்தில் இன்னும் காதல் திருமணங்கள் நடைபெறுவதில்லை . 99.9% நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தான் . அதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பற்றி மட்டுமே எழுதுகிறேன் .

1 .
சுத்தமான வியாபாரம் . இரண்டு பக்கமும் சொத்துக்கள் மற்றும் ஆணின் பக்கம் நல்ல வேலை , சரிசமமாக குடும்பப்பின்னணி இருந்தால் போதும் . இப்போ வெளித்தோற்றமும் சேர்ந்து உள்ளது .( எங்க பக்கம் வரதட்சணை இல்ல)

2 .
கல்யாணம் முடிந்து வேலைக்காக ஏதாவது பெருநகரங்ளுக்கு போய்விட்டால் பரவாயில்லை . இல்லையெனில் சுயமாக வாழ்வது கடினம் .,hyper realistic expectations , தொடர் மதிப்பீடுகள் . பெண் நாடகத்தில் வரும் கதாநாயகியாக வலம் வரனும் . ஆணுக்கு பெண் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏகப்பட்ட காலாவதியான அட்வைஸ் வரும் .

3 .
வாழ்க்கைத்துணை அமைவது game with pure luck . Gambling மாதிரி தான் . நான் நிறைய வெற்றிகரமான திருமணங்களை பார்க்கிறேன் , ஆனால் மகிழ்ச்சியான திருமண உறவுகள் அரிது . நம் ஊரில் சேர்ந்து இருந்தா போதும் ,சந்தோசமாக இருப்பது தேவையில்லை .

4.
திருமணம் என்பது இரண்டு தனித்தனி மனிதர்கள் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையை நடத்துவது . நம் ஊரில் இரண்டு குடும்பங்கள் சேர்வது னு பெருமை பேசி பலபேர் கைபட்ட பண்டமாக பாழாகி விடுகிறது.

5 .
ஆங்கிலத்தில் breadcrumbing னு ஒரு வார்த்தை உண்டு . அத்தியாவசியமானதை விட்டுவிட்டு மீதி அத்தனையும் கவனிப்பது . Love is the last thing . காதல் என்பது இந்திய சமுதாயத்தில் திருமண உறவிற்கு மிக கடைசியாக அதுவும் optional ஆக சேர்க்கும் விசயம் .

6 .
நிறைய பொய் . இது திருமணம் பேச ஆரம்பித்தது முதல் வாழ்க்கை முடியும் வரை . பிடிக்காத உறவினரை விழுந்து விழுந்து கவனிப்பதில் தொடங்கி .. பற்பல .

7 .
பிரச்சினையை சரிசெய்ய திருமணத்தை ஒரு தீர்வாக பார்ப்பது . திருமணம் என்பது இரண்டு பேர் வாழத்தான், திருத்தி மறுவாழ்வு தரும் மையம் அல்ல னு புரிவதில்லை . திருமணம் திருத்தாவிட்டால் அடுத்த மருந்து குழந்தை .

8 .
குழந்தை வந்துவிட்டால் அம்மா , அப்பா தான்.. கணவன் மனைவியாக வாழ முடியாது , கூடாது , வாழ நினைத்தால் பெருங்குற்றம்.

9 .
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு இருவரும் குடும்ப நிறுவனம் நடத்துவது தான் . Household -Economy- Society நிதி ஆணின் துறை . மற்ற இரண்டும் பெண்ணின் துறை . தற்கால தம்பதி மூன்றையும் இரண்டு பேரும் சேர்ந்து நிர்வகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தீராத தேவைகள் , ஆசைகள் நடுத்தர வர்க்கம் தீர்க்க நிற்காமல் ஓட , frustration and disappointments .

10 .
பொதிசுமைக்கும் மாடுகள் இரண்டும் ஒரே போல் ஒன்றோடு ஒன்று புரிந்து இழுத்தால் நலம் . இல்லையெனில் குறுக்கடி பாய்ந்த மாட்டால் நல்ல மாடும் சேர்ந்து அடிவாங்கும் . வேலையும் ஓடாது . நல்ல மாட்டுக்கும் கதை கந்தல்.