Friday, October 28, 2022

தஞசாவூர் பெயர் வந்த கதை

தஞசாவூர் பெயர் வந்த கதை

பொன்னியாறு என்று சிறப்பாக வழங்கப்பெற்ற காவிரியாற்றின் தென்புறம்

ஒரு யோசனை அல்லது எட்டு மைல் தூரத்தில் அமையப்பெற்ற நகரம்

தஞ்சை . அதன் வடபாகத்தில் மணிமுத்தா நதி என்ற ஓர் சிற்றாறுண்டு .

அது இப்போது வடவாறு என்று அழைக்கப்படுகிறது . அதன் மேற்கு அருகாமையில் அமிருதபுஷ்கரணி என்று ஒரு குளமுள்ளது . இந்நகரத்திற்கு தஞ்சை என்ற பெயர் மஹாவிஷ்ணுவினாலிடப்பெற்றது .பண்டை ஒருகால் ,

புராணபிரசித்தரான பராசரமுனிவர் இங்கு ஆசிரமத்தைக் கட்டித் தவம் புரிந்துவந்தார் . பல சீடர்களைப் படிப்பித்து வந்தார் . தேவாசுரர்கள் பண்டு

பாற்கடலைக்கடைந்து அமிருதத்தை அடைந்தனர் . அதிற் சிறிது பெற்று

பராசர முனிவர் இந்த அமிருத புஷ்கரணியில் சேர்த்தார் . அது

காரணமாக அவரிருக்குமிடமெல்லாம் செழித்து ஓங்கி வளர்ந்து

வந்தது . முனிவர் தமது தவத்தைச் செவ்வனே புரிந்து வந்த

காலத்தில் உலகில் பனிரெண்டாண்டு மழையில்லாமல் கடும் பஞ்சம்

நேர்ந்தது . அதனால் , தஞ்சகன் , தண்டகன் , தாரகன் என்ற மூன்று

அசுரர்கள் தம் பரிவாரத்துடன் பராசர முனிவரின் ஆசிரமம்

அணுகி அங்குள்ள அக்குளத்தின் நற்சுவை வாய்ந்த நீரை அருந்திக் களை

தீர்ந்து தபோமுனிவர்களுக்கு இடையூறு செய்தார்கள் .

முனிவர் பலவாறு நல்லுரை சொல்லியும் கேட்சவில்லை . முனிவர் பிர

மதேவரிடம் முறையிட்டனர் . பிரமன் சிவபெருமானிடம் முறை

யிடச்சொல்லவே , அவரைக்குறித்து தவம் செய்ய , அவர் மனமி

ரங்கி காளிகாதேவியை அனுப்பினார் . அந்தத்தேவியாரொருவரால்

அவர்களைக் கொல்ல முடியாததாயிற்று , பெரியதோர் போர்

நடந்தது . புஷ்கரணியின் அமிருதம் கலந்த நீரை அருந்துவதி

னால் அவ்வசுரர்களுக்கு வன்மை குன்றாது போர் புரிய ஏதுவாக

இருந்தது . அதுகண்டு மகரிஷி மஹாவிஷ்ணுவைக்குறித்து தவம்

செய்யவே , பகவான் கார்போன்ற வடிவம் கொண்டு அக்குளத்தி

லுள்ள தண்ணீரை முற்றும் தாமே அருந்தினார் . அதுபற்றி

அசுரர்களுக்கு வன்மை குன்றி விட்டது . வன்மை குன்

றவே தஞ்சகன் யானை வடிவமெடுத்துப் போர் புரிந்தான் . விஷ்ணு

பகவான் உடனே நரசிங்க வடிவமெடுத்து தஞ்சகனைக் கொன்றார் .

சாகுமுன் , தஞ்சகன் பகவானைக் குறித்து தாம் எடுத்துள்ள நர

சிங்க வடிவத்தோடு இங்கு சேவை சாதிக்க வேண்டுமெனவும் , தன்

பெயரால் இந்தப்பட்டணம் உலகில் வழங்கவேண்டுமென்றும் வரம்

கேட்டுக்கொண்டான் . பகவான் அப்படியே வரமளித்தார் . அது

முதல் இத்தலம் தஞ்சாபுரி என்ற பெயரை அடைவதாயிற்று .

 

 

பிறகு , தண்டகன் பூமியைக் குடைந்து பயந்து ஓடின தால்

விஷ்ணுபகவான் வராஹம் (பன்றி)உருவம் தரித்து அவனைக்கொன்

றார் . தாரகனை காளிகா தேவியார் தனது சக்திகுலிசம் என்ற

சூலத்தால் கொன்றனள் . அதுமுதல் போரில் தமது உடம்பில்

பட்ட காயமெல்லாம் அழகிய ஆபரணங்களாக மாறி அவ்வம்மை

யார் பச்சைக்காளி " பவழக்காளி என்று திருநாமங்களுடனும்

கோடியம்மன் , கோடீச்சுரக்காளி என உலகமறியப்பெற்றாள் .

அப்பொழுது பிரமா முதலியோர்களும் பராசர முனிவரும் மஹா

விஷ்ணுவை இவ்விடத்திலேயே அந்தந்த வடிவத்துடனே எழுந்

தருளியிருந்து தங்களுக்கு சேவை சாதித்தருள வேண்டிக்கொண்

டதின் பேரில் , பகவானும் அவ்விதமே செங்கமலவல்லித்தாயாரு

டன் ஸ்ரீநீலமேகப்பெருமாளாகவும் , ஸ்ரீநரசிங்கமூர்த்தியும் தஞ்ச

கனை வதஞ்செய்த இடத்திலேயே லக்ஷ்மியோடு கூடின ஸ்ரீ நரசிங்க

மூர்த்தியாகவும் , மணிக்குன்ற வடிவமாகவும் தோற்றப்பெற்று

இந்த மூன்று வடிவமாய் , முற்காலத்தில் வடவாற்றிற்குத் தென்

கரையில் வம்புலாஞ்சோலை யிலும் அண்மையிலும் எழுந்தருளி

யிருந்து நாயக்க வம்ச அரசாட்சியின் பிற்காலத்தில் றங்கரையில்எழுந்தருளச் செய்யப்பெற்று உலகமுய்ய ஸேவை ஸாதித்து வருகிறார் .

No comments:

Post a Comment