Friday, October 28, 2022

சுற்று வட்டப் பேருந்து சேவை ( Circular Service )

 


சுற்று வட்டப் பேருந்து சேவை ( Circular Service )

அறிந்து கொள்வோம்:

சுற்று வட்டப் பேருந்து சேவை ( Circular Service )

தம்பி ஒருவர் இன்பாக்ஸில் இந்தப் படத்தினை அனுப்பி இந்தப் பேருந்தின் ஊர் பலகை தவறாக உள்ளதை சுட்டிக் காட்டினார்.

விருதுநகர் - விருதுநகர் எனும் இந்த வழித்தட பெயர் பலகை தவறான பெயர் பலகை இல்லை. பொதுவாக பெருநகரங்களில் இது மாதிரியான பேருந்து சேவை உள்ளன. சர்க்குலர் சர்வீஸ் (வட்டப் பேருந்து) என்று சொல்லப்படும். அதாவது புறப்படும் இடம் சேரும் இடமும் ஒரே இடம். ஆனால் வழித்தடமானது புறப்பட்ட இடத்திலிருந்து ஒரு வட்டம் அடித்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வரும் வகையில் ஆன வழித்தடத்தில் பயணம் செய்யும். அதாவது போன வழியிலேயே திரும்பி வராமல், ஒரு வட்டமடித்து புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும் வகையிலான வழித்தடம்

மதுரையில் கூட இந்த வகையான பேருந்து சேவை உள்ளது. பேருந்து வழித்தட எண் C5 என்று நினைக்கிறேன். மதுரை மட்டுமல்ல அனைத்து பெருநகரங்களிலும் C வரிசையில் இயங்கும் பேருந்துகள் இது போன்ற சுற்று வட்டப் பேருந்துகள். C1 என்றால் அது சர்க்கில் சர்வீஸ். 1C என்றால் அது வேறு வழித்தடம்.

நமது ஊருக்கு புரியும் வகையில் சொல்வது என்றால் அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை வழித்தட சேவை துவங்கப்பட்டால் அது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி..

நாடார் சிவன் கோவில்,

அகம்படியார் மஹால்

மரக்கடை பஸ் ஸ்டாப்

சௌடாம்பிகா பாலிடெக்னிக்

காந்திநகர்

சாய்பாபா கோயில்

ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவனம்

பாளையம்பட்டி

பிளாக் ஆபிஸ்

மகாராணி தியேட்டர்

புதிய பேருந்து நிலையம் என்று அடையும் வகையிலான வழித்தடமாக இருக்கும்.

அது போன்று தான் விருதுநகர் - விருதுநகர் வழித்தடம் இருக்கும். உண்மையில் இந்த வழித்தடம் எது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்றபடி இது தவறான பெயர் பலகையாக இருக்க வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment