அகல் விளக்கை சுத்தம் செய்வது எப்படி
தீபத்துக்கு ஏற்றிய அகல் விளக்கை எல்லாம் இப்படி செஞ்ச பிறகு எடுத்து வைங்க, அடுத்த வருஷம் எடுக்கும் போது கூட அப்படியே புதுசா வாங்கின அகல் விளக்கு மாதிரியே இருக்கும்.
கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். இந்த தீபத்திற்காக நாம் அகல் விளக்குகளை ஏற்றுவது, நெய்வேத்தியம் செய்வது, என்று அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து முடித்து இருப்போம். இப்போது அந்த வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு ஏற்றிருக்கும் அகல் விளக்கை சுத்தமாக தேய்த்து எடுத்து வைக்க வேண்டும் அப்போது தான் அடுத்த வருடம் அதை பயன்படுத்த முடியும் இப்போது அதை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தீபத்திற்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வீடு முழுவதும் பிரகாசமாக வைத்திருப்போம். தீபம் முடிந்த பிறகு இந்த விளக்குகளை எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் அல்லவா, அதற்கு அவைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டுமே. அவ்வளவு எண்ணெய் பிசுக்கு உள்ள விளக்குகளை எப்படி சுத்தம் செய்றதுன்னு யோசிக்கிறாங்களா? கவலையை விடுங்க அந்த அகல் விளக்குகளில் கொஞ்சம் கூட எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தம் செய்து புதுசு போல மாத்தி வைச்சிடலாம்.
நீங்கள் வைத்திருக்கும் அகல் விளக்கின் அளவிற்கு ஏற்றார் போல் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு, சமையல் சோடா இரண்டையும் சேர்த்த பிறகு உங்களிடம் மீதமான எலுமிச்சை பழ தோள்கள் இருந்தால் அதையும் அதில் சேர்த்து விடுங்கள். ( வீட்டில் எலுமிச்சை பழம் இருந்தால் போடுங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை) இத்துடன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், அல்லது சோப்பு பவுடர், லிக்விட் எது இருந்தாலும் அதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து விடுங்கள். அதன் பிறகு கொதித்து கொண்டு இருக்கும் தண்ணீரில் இந்த அகல் விளக்குகளை போட்ட பிறகு அடுப்பை அனைத்து விடுங்கள். அரை மணி நேரம் விளக்கு அந்த தண்ணீரில் இருக்கட்டும், அதன் பிறகு அகல் விளக்கை எடுத்து பாருங்கள், அதை தேய்க வேண்டிய அவசியம் கூட இருக்காது.
எண்ணெய் பிசுக்கு தீபம் ஏற்றிய கறை அனைத்துமே காணாமல் போய் இருக்கும். அதன் பிறகு எடுத்து ஒரு துணி வைத்து துடைத்து காய வைத்து அகல் விளக்கை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். இதற்காக நாள் முழுவதும் அமர்ந்து அந்த விளக்கை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இப்படி விளக்குகளை சுத்தம் செய்து எடுத்து வைக்க நேரம் இருக்காது .இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் இந்த முறை முயற்சி செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment