நம்மாழ்வார் கூறும் நன்மை
தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.!
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர வேண்டும்...!
எது கெட்டுப்போகிறதோ!
எது புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.
3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??
பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா??
No comments:
Post a Comment