ஸ்வீட்ஸ், சாக்லெட்
அலுவலகத்தில் கொடுக்கப்படும் ஸ்வீட்ஸ், சாக்லெட்களை சிலர் குழந்தைகளுக்கென்று பத்திரப்படுத்துவார்கள். கடைநிலை ஊழியர்கள் என்றால் பொருளாதாரம் சார்ந்து அச்செயல் ஏற்புடையதாக இருக்கும். ஆனால், தேவையெனில் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள இயலுகிற, தாராளமான பொருளாதாரம் உள்ளவர்களும் இதே செயலை செய்யும் போது ,
" அட, உங்களுக்குன்னு கொடுத்ததை ஏம்யா மூட்டை கட்டுறீங்க, ஃபன்னி ஃபெல்லோஸ்' என்று தோன்றும்.
இதெல்லாம் நான் அப்பாவாகும் வரை. இப்போதெல்லாம் நானும் மூட்டை கட்டிவிடுகிறேன். இவ்வளவுக்கும் வாங்க முடியாத பொருளோ, அபூர்வமானதோ ஒன்றும் இருப்பதில்லை. 'இந்த சாக்லெட் என் பொண்ணுக்கு பிடிக்குமே' என்று தோன்றிவிட்டால் அதன் பின் அந்தச் சாக்லெட்டை தின்ன முடிவதில்லை. செண்ட்டிமெண்ட்டை உதறித் தள்ளிவிட்டு சாப்பிட்டாலும் அது சுவைப்பதில்லை. ஒரு மாதிரி டிஸ்ட்ரப்டா ஃபீல் ஆவதை உணர்ந்தும் இருக்கிறேன். நமக்கு என்று கொடுத்ததை குழந்தைகளிடம் கொடுத்து அதை அவர்கள் சாப்பிடுவதை காணும் போது கிடைக்கும் ஃபீல் 'குழலினிது யாழ் இனிதுக்கு' ஒப்பானது.
ஊரில் ஆயாக்கள் விஷேச வீடுகளில் சாப்பிட்டுவிட்டு அப்பளத்தை ஒரு கவரில் போட்டு யாரும் அறியாமல் முந்தியில் சொருகி வருவதன் சூட்சுமம் புரிய எனக்கு ரெண்டு புள்ளைங்க பொறக்க வேண்டியதாக இருந்திருக்கிறது.
No comments:
Post a Comment