Wednesday, June 19, 2024

உடலின்மொழி

உடலின்மொழி

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி*

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்*

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி*

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.*

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்*

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழிவாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி*

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி*

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி*

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை*

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்*

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்*

 

No comments:

Post a Comment