Wednesday, June 12, 2024

சிபில் ஸ்கோரை பார்ப்பது எப்படி?

 சிபில் ஸ்கோரை பார்ப்பது எப்படி?

உங்களது சிபில் ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்ள சிபில் வலைதளத்திற்கு https://www.cibil.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அதில் free annual cibil score option க்ளிக் செய்யவும், அதில் உங்களது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், முகவரி மற்றும் பான் விவரங்கள் மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக கொடுக்கவும்.

ஒரு முறை மட்டுமே இலவசம் இதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி எண் வரும். இந்த ஒடிபியை சிபில் தளத்தில் கொடுத்து தொடர்ந்து செயல்பட கிளிக் செய்யவும். இதன் பிறகு நீங்கள் உங்களது புதிய பக்கத்திற்குள் நுழைவீர்கள். உங்கள் சிபில் ஸ்கோரை சரிபார்க்க பதிவு செய்யப்பட்ட உறுதிப்படுத்தல் கிடைக்கும். அங்கு உங்கள் சிபில் ஸ்கோரினை நீங்கள் காண முடியும். எனினும் இது ஒரு முறை மட்டுமே இலவசமாக பார்க்க முடியும்.

எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் நீங்கள் ஒரு முறைக்கு மேல் பார்க்க விருப்பப்பட்டால், கட்டணத்தினை செலுத்தி பார்த்துக் கொள்ள முடியும். இது ஒரு மாதத்திற்கு 550 ரூபாய் எனவும், இதே 6 மாதங்களுக்கு 800 ரூபாயும், 1 வருடத்திற்கு 1,200 ரூபாய் செலுத்தியும் பார்த்துக் கொள்ளலாம். கட்டணம் செலுத்தி பார்க்கும் போது நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களது சிபில் அறிக்கையினை பார்த்துக் கொள்ளலாம்.
கட்டணம் செலுத்தி எப்படி பார்ப்பது?

பணம் செலுத்தி சந்தாவுக்கு செல்ல விரும்பினால், உங்களை நீங்களே அங்கீகரிக்க வேண்டும். நீங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலில், ஒரு மின்னஞ்சலை பெறுவீர்கள். அந்த இணைப்பை க்ளிக் செய்து மின்னசஞ்லில் கொடுக்கப்பட்ட ஒடிபியைக் கொடுக்க வேண்டும். இதன் பிறகு நீங்கள் மீண்டும் உங்களது பாஸ்வேர்டை மாற்ற வேண்டியிருக்கும். மேலும் உங்களது விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே அங்கு காணப்படும். உங்களது மொபைல் நம்பரை கொடுத்து சமர்பிக்க வேண்டும். அதனை சமர்பித்த பின்பு உங்களது கடன் அறிக்கையுடன், உங்கள் சிபில் ஸ்கோரையும் பெற முடியும்.

சிபில் ஸ்கோரில் என்ன விவரங்கள் இருக்கும்?

கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகை கடனை, வங்கிகளிலோ அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள ஒவ்வொருவருர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும். இதனால் தான் வங்கிகள் இந்த சிபில் ஸ்கோரினை பொறுத்து கடன் வழங்குகின்றன.


சிபில் அறிக்கையில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

உங்களது சிபில் ஸ்கோரில் கிரெடிட் கார்டு அல்லது மற்ற கடன் விவரங்கள், கடன் தொகை, கடன் தொகை செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் கடனை சரியாக செலுத்தியிருக்கிறார்களா? அல்லது எத்தனை மாதங்களாக தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள். கடனை கட்டி முடித்து விட்டார்களா? அல்லது பாக்கி வைத்துள்ளார்களா? வாராக்கடன் ஏதும் உள்ளதா? என்ற விவரங்கள் இருக்கும்.

எவ்வளவு சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும் பொதுவாக உங்களது சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கு மேல் இருந்தாலே எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக கொடுப்பார்கள். ஆனால் அதற்கு கீழ் சிபில் ஸ்கோர் உள்ளவர்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் யோசிக்கும். அது அப்படியே கிடைத்தாலும், வட்டி சற்று அதிகமாகவே இருக்கும்.


ஏன் சிபில் ஸ்கோர் குறைகிறது?

பொதுவாக உங்களது சிபில் ஸ்கோர் கிரெடிட் கார்டு கட்டணமோ அல்லது வேறு எந்த வகைக் கடனோ, தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, அதோடு கிரெடிட் கார்டில் அனுமதிக்கப்பட்ட தொகையில் பாதிக்கும் மேல் உபயோகப்படுத்தியிருப்பது? வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பம் செய்வது? இப்படி பல காரணங்களினால் உங்களது சிபில் ஸ்கோர் குறையும்.

சிபில் ஸ்கோரை எப்படி அதிகரிக்கலாம்?

நீங்கள் இதுவரை எந்த வித கடனும் பெறவில்லை எனில், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் கிரெடிட் கார்டோ அல்லது சிறிய தொகையில் கடனோ பெற்று அதை சரியாக செலுத்துங்கள். ஏற்கனவே வங்கிகளில் வாங்கிய கடனில் நிலுவை இருந்தால், அதனை செலுத்தி விடுங்கள். ஏனெனில் சிபில் குறைவாக இருந்தாலும், சில நிறுவனங்கள் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. வட்டி கூடுதலாக இருந்தாலும், தாமதமில்லாமல் கடனை கட்டி வாருங்கள். இப்படி ஒவ்வொரு தரப்பிலும் கடனை சரியாக செலுத்தினாலே நிச்சயம் சிபிலை அதிகரிக்க முடியும்.


No comments:

Post a Comment