Saturday, April 19, 2025

கார்டியாக் அரெஸ்ட்

கார்டியாக் அரெஸ்ட்

கார்டியாக் அரெஸ்ட் என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலை. இது இதயம் துடிப்பதை நிறுத்தும் போது அல்லது இரத்தம் பம்ப் செய்வது முழுமையாக நிறுத்தப்படும் போது ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் அந்நபர் சட்டென்று சரிந்து விழுவதோடு, செயலிழந்தும் இருப்பார். பெரும்பாலும் கார்டியாக் அரெஸ்ட் எவ்வித எச்சரிக்கை அறிகுறிகளும் வெளிக்காட்டாமல் எப்போது வேண்டுமானால் சட்டென்று ஏற்படலாம். இந்த கார்டியாக் அரெஸ்ட் மிகவும் ஆபத்தான நிலை. இதற்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரை இழக்க நேரிடும். கார்டியாக் அரெஸ்ட்டை, கார்டியோபல்மனரி அரெஸ்ட் என்றும் அழைப்பர். இந்நிலையில் இதயம் இரத்தத்தை அழுத்துவதை நிறுத்திவிடும் மற்றும் உடலின் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சட்டென்று தடைபட்டு, அதன் விளைவாக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

ஏனெனில் உடலுறுப்புகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில், உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கிவிடும், எனவே கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால், சிபிஆர் கொடுக்க வேண்டியது அவசியம். இது உடலுறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவி புரிந்து, உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுகிகறது. பைபாஸ் அறுவை சிகிச்சைகு பின் கார்டியாக் அரெஸ்ட் உடனே ஏற்படுமா? மருத்துவர்களின் கூற்றுப்படி, கார்டியாக் அரெஸ்ட் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த சில நாட்களிலேயே ஏற்படலாம். இது அரிதானது என்றாலும், சுமார் 0.7-2.9 சதவீதம் மட்டுமே இம்மாதிரியான நிகழ்வு ஏற்படுகிறது. எனவே உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமான, உடனடி நோயறிதல் மற்றும் சிகிச்சையை மேற்கொள்வது முக்கியம். எந்த காரணங்களுக்காக சர்ஜரிக்கு பின் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது? ஒருவருக்கு சர்ஜரி முடிந்த பின் கார்டியாக் அரேஸ்ட் ஏற்படுவதற்கு பல்வேறு சிக்கல்கள் காரணமாக இருக்கலாம்.

* மாரடைப்பு * இரத்தப்போக்கு * கிராப்ட் செயலிழப்பு * கடுமையான கிராப்ட் அடைப்பு * கார்டியாக டம்போனேட் * கடுமையான இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு * அரித்மியாக்கள் * பெருநாடி துண்டிப்பு * கடுமையான வால்வுலர் செயலிழப்பு யாருக்கெல்லாம் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம்? பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பின் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் உள்ளன. அவை பின்வருமாறு: வயது அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் வயதாகும் போது அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த சாத்தியத்தை அதிகரிக்கும் பல கடுமையான நீண்டகால ஆரோக்கிய நிலைமைகள் உள்ளன. பெண்கள் ஆண்களை விட பெண்களுக்கு தான் கரோனரி இதய நோய் ஏற்படுகிறது. எனவே பெண்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் சிக்கல்களை சந்திக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சை எப்போதுமே அவசர அறுவை சிகிச்சை ஆபத்தானது தான். ஏனெனில் இந்நிலையில் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சைய திட்டமிட போதுமான நேரம் கிடைக்காது. மேலும் இதயம் ஏற்கனவே மாரடைப்பால் கடுமையாக சேதமடைந்திருக்கும். 2-க்கும் மேற்பட்ட கிராப்ட்டுகள் நிபுணர்களின் கூற்றுப்படி, அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தால், சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன. உடல் பருமன் ஒருவர் மிகுந்த உடல் பருமனாக இருந்தாலோ அல்லது உடல் எடையுடன் இருந்தாலோ, அந்நபருக்கு அறுவை சிகிச்சையின் போது மிகவும் ஆழமாக வெட்டி, இதயத்தை அணுக வேண்டியிருக்கும். எனவே இத்தகையவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

No comments:

Post a Comment