Followers

Saturday, September 26, 2026

பண்ருட்டி பலாப்பழம்

பலாப்பழம்

பண்ருட்டி பலாப்பழம் - பலாப்பழங்களின் சொர்க்கம்



·         பண்ருட்டி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

·         இது பலாப்பழங்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

·         இங்கு விளையும் பலாப்பழங்கள் அதன் சிறந்த வாசனை, சுவை மற்றும் அமைப்புக்காகப் புகழ்பெற்றவை.

·         பண்ருட்டியில் ஆண்டுதோறும் பலாப்பழத் திருவிழா கொண்டாடப்படுகிறது, இதில் பலவிதமான பலாப்பழங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

·         ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது.

·         தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும்.

·         ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும்.

·         இந்த சீசன் காலத்தில்தான் பலாப்பழம் அதிகமாக விற்பனையாகும்.

·         பண்ருட்டியின் பலா மரங்கள் அதிக அளவில் விளைச்சல் தரக்கூடியவை, சில ஆரோக்கியமான மரங்கள் வருடத்திற்கு 150 முதல் 200 பழங்கள் வரை விளைவிக்கின்றன.

·         பண்ருட்டியில் 3 கிலோமீட்டர் வரை 100-க்கும் அதிகமான பலா மண்டி உள்ளன.

·         தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் பண்ருட்டியிலிருந்து பலாப்பழங்கள் அனுப்பப்படுகிறது.

·         பண்ருட்டி பலாப்பழங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

·         ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

குண்டலினி யோகம்

குண்டலினி யோகம்


குண்டலினி
யோகம்னா என்னன்னு தெரியுமா? அதுல இவ்ளோ பலன்களா?

நாம் உணர்ந்து நம்மை உலகிற்கு உணர்த்தும் எளியமுறை பயிற்சி குண்டலினி யோகம். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சி.

உயரே செல்லாமல், கீழ்நோக்கி போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

மனிதன் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா?

இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி.

இந்த உயிர்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும்.

உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் 6 இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரம்.

ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும்.

உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும்.

இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.