ஆனைமலை மாசாணியம்மன்
மூன்று அமாவாசைக்குள் தண்டித்து விடுவாள் - நீதிக்கல் வழிபாடு…
·
பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நீதி வேண்டி.காய்ந்த மிளகாய் வைத்து நல்லெண்ணெய் விட்டு அரைத்து, அங்குள்ள நீதிக்கல்லில் பூசி வழிபடும் விநோதமான நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது.
·
இம்முறையில் வழிபாடு செய்வதால் தீய சக்திகள் விலகி, இழந்த பொருட்கள் மீட்கப்பட்டு உரிய நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
நீதி கேட்டு முறையிடுதல்
·
திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கவோ அல்லது தங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு நியாயம் கிடைக்கவோ பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
அம்மிக்கல் வழிபாடு:
·
கோவிலில் உள்ள பிரத்யேக அம்மிக்கல்லில் காய்ந்த மிளகாயை வைத்து மையாக அரைப்பார்கள்.
நீதிக்கல் பூசுதல்:
·
அரைத்த மிளகாய் விழுதை நீதிக்கல்லில் அல்லது குறிப்பிட்ட சிலைகளின் மீது பூசி தங்கள் குறைகளை அம்மனிடம் முறையிடுவர்.
·
இந்தக் கோவிலின் மிக முக்கிய சிறப்பம்சமே மிளகாய் அரைத்து தடவும் வழிபாடாகும்.
·
கோவில் உள்ளே இந்த நீதிக்கல் உள்ளது. அம்மனுக்கு வலது புறத்தில் கிழக்கு திசைப் பார்த்து இந்த நீதி தேவதை சிலை உள்ளது. இந்த நீதி தேவதை உருவம் 4 முகம் கொண்டது.
·
மார்புக்கு மேல் மனித உருவமாகவும், மார்புக்கு கீழ் பாம்பு உருவமாகவும் நீதி தேவதை சிலை அமைப்பு உள்ளது.
·
நீதி தேவதையின் கைகள் கும்பிட்ட வண்ணம் இருக்கிறது.
·
பகைவர்களாலும், கள்வர்களாலும், மற்றவர்களாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த அம்மனை வழிபடுகின்றனர்.
·
பில்லி, சூனியம், மந்திரம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், பொருட்களைத் திருட்டுக் கொடுத்தவர்களும், கடையில் மிளகாய் வற்றலை வாங்கி நீதிக்கல்லின் அருகிலிருக்கும் உரலில் அரைத்து நீதிக்கல்லில் முழுவதும் பரவும்படி தேய்த்து தாங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தை முறையிட்டால் தவறு செய்தவர்களை மாசாணியம்மன் மூன்று அமாவாசைக்குள் தண்டித்து விடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது.
No comments:
Post a Comment