Followers

Sunday, September 20, 2026

நயா பைசா

நயா பைசா




என்னிடம் சுத்தமாக காசு இல்லை என்பதற்கு ஒரு நயா பைசா கூட இல்லை என்று பேச்சு வழக்கில் சொல்வதைக் கேட்டிருப்போம்.

'நயா' என்றால் என்ன... அது என்ன மொழி வார்த்தை...

ஒரு நயா பைசாவின் மதிப்பு என்ன... தெரிந்து கொள்வோம் வாருங்கள்...!

நயா பைசா என்பது இந்திய ரூபாயின் 1/100 பங்கைக் குறிக்கும் ஒரு நாணய அலகு ஆகும். 1957 முதல் 1964 வரை இந்தியாவில் புழக்கத்தில் இருந்த இந்த வார்த்தை, பழைய பைசாக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட "புதிய பைசா" என்று அழைக்கப்பட்டது.

விளக்கம் :-

1957ஆம் ஆண்டில், இந்தியா தசம நாணய முறையை அறிமுகப் படுத்தியபோது, பழைய பைசாக்களிலிருந்து வேறுபடுத்தி புதிய பைசாக்களை "நயா பைசா" என்று அழைத்தனர்.

" நயா " என்பது ஹிந்தி மொழியில் " புதிய " என்று பொருள்படும்.

இதன் மூலம், ரூபாய் 100 பைசாவாகப் பிரிக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டுக்குப் பிறகு, "நயா" என்ற சொல் நீக்கப்பட்டு, சாதாரண "பைசா" என்றே பயன்படுத்தப்பட்டது.

90களின் காலகட்டத்திலேயே ஒரு பைசாவுக்கு மதிப்பு குறைந்துவிட்டாலும் சட்டப்படி 2011 ஆம் ஆண்டு தான் செல்லாக் காசாக்கப்பட்டது.

 

No comments:

Post a Comment