ஜெய் காளிதேவியின் உருவ அமைப்பின் தத்துவம்
கொஞ்சம் கோவமா பேசுற பொண்ணை காளி மாதிரி கத்துறான்னும், அலங்காரம் செய்யாம தலைவிரி கோலமா இருக்கும் பெண்ணை பத்ரகாளி மாதிரி இருக்கான்னு கிண்டல் செய்வோம். அதேமாதிரி, வீட்டு பூஜை அறையில் காளி அம்மன் படத்தை வச்சு வணங்கக்கூடாதுன்னும் சொல்வோம். காரணம், வெளித்தள்ளிய பல்லும், கருத்த உடலும், தலைவிரி கோலமும், மண்டை ஓட்டை மாலையாகவும், கையில் கபாலடம், மற்றும் ஆயுதங்களை ஏந்தியும் காட்சி தருவதால் நாம் காளி தேவியை கண்டு பயப்படுகிறோம்.
நாம் நினைக்குற மாதிரியில்லாம காளி ஒதுக்கப்பட வேண்டிய தெய்வமில்லை. "காளி' என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், நாளடைவில் பயம் நீங்கி, அவளிடம் ஈடுபாடு ஏற்படும். காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம். தீயவர்களை அழிக்க அம்பிகை எடுத்த அவதார தோற்றமேயன்றி அவள் குழந்தையான நாம் அவளை கண்டு பயப்பட அவசியமில்லை. அறியக் கூடியவள் நான், அறிய முடியாதவள் நான், ஞானமும், அஞ்ஞானமும் நான், பிறப்பும், பிறப்பில்லாததும் நான், கீழும், மேலும் நான், சகலமும் நான்...' என்கிறாள் காளி. உண்மையை மறைத்துக் காட்டுகிறாள். உண்மையைப் புரிந்து கொண்டால் ஸ்வரூபத்தை காணலாம்.
நான் உலகத்தின் உயிர் தத்துவம். உலகினின்று நான் பிரிந்தால், உலகம் சவமாகிக் கிடக்கும். "இதை விளக்கத்தான், நான், சிவரூபமான சவத்தின்மேல் காலடி வைத்திருக்கும் தோற்றம். ஞானம், விஞ்ஞானம் எல்லாமே என் விரிந்த கூந்தலில் அடக்கம். நாக்கை அடக்கினால் யாவும் வசப்படும். அதனால், நாக்கைத் தொங்கவிட்டு இதை விளக்குகிறேன். சரீரத்தில் தலையே பிரதானம். அதுவே, ஞான சக்தி நிலையம். இந்த நிலையத்தில் உள்ளது எதுவோ அதுவே பிரும்மாண்டத்தில் உள்ளது...' என்கிறார்.
"பிரமாண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள் அவளே! இந்த பிரும்மாண்டங்களையே முண்ட மாலையாக தரித்திருக்கிறாள். ஒரு கரத்தில் கொடுவாள். அது அஞ்ஞானத்தை வெட்டித் தள்ளும் சாதனம். கீழே தொங்கும் தலை, விஷ வாசனைகளிலிருந்து அம்பிகையால் விடுவிக்கப்பட்ட ஜீவனின் இறுதித் தோற்றம். வர, அபய முத்திரை, பக்தர்கள் வேண்டுவதை அளித்து அபயம் தருவது. ஆடை அணியாதவள் காளி. ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப் பட்டுள்ளது. அஞ்ஞானம் விலகினால், ஜீவப்ரகாசம் புலனாகும் என்பதை, ஆடை இல்லாமலிருப்பது விளக்குகிறது.
சிவபெருமானின் நான்கு சக்திகளில் காளி குரோத சக்தி ஆவாள். பராசக்தியாகிய தேவியின் சினத்திலிருந்து தோன்றியவள் காளி. கற்பத்தில் பிறக்காத கன்னிகையாள் மட்டுமே மரணம் தனக்கு சம்பவிக்க வேண்டும் என்று பிரம்மாவிடம் வரம் பெற்ற சும்ப, நிசும்பா்கள் ஈரேழு பதினாங்கு லோகங்களையும் ஆட்டிப் படைத்தனா். இவா்களின் அட்டூழியங்களை சகிக்காத பிரம்மா சிவனிடம் முறையிட அவா் கடும் சினமுற்றவராய் மென்மையா பராசக்தியை நோக்கி “ஏ“ காளி என்றாா். அடுத்த கணமே கெளாி மனோகாியான பாா்வதி தேவியின் சாீரத்தில் இருந்து காிய நிறம் கொண்ட கன்னிகை ஈரேழு பதினாங்கு உலகங்களும் அதிரும்படி வீரசக்தி தோன்றினாள். அவளே காளி. காளி என்றால் விரட்டுபவள் என்றும் பொருள் உண்டு. காலனை விரட்டுவதாலும், தீமைகளை விரட்டுவதாலும் காளி என்றனா். தமிழகத்தில் காளி பாலை நிலத்தின் தெய்வமாகப் போற்றப்படுவாள்.
ஜீவாத்மாக்களைப் பிறவிப் பெருங்கடலிருந்து விடுவித்து முக்தி என்னும் கரை சோ்ப்பவள் காளி. நாம் தூரத்திலிருந்து பாா்த்தால் கடலின் நிறம் நீலமாகத் தென்படுகிறது. அருகில் சென்று கடல் நீரை எடுத்தும் பாா்த்தால் அந்தக் கடல் நீருக்கு என்றும் தனியே ஒரு நிறமும் இல்லை. அதுபோல் அஞ்ஞான நிலையில் இருப்பவா்களுக்கு காளி கருமை நிறம் கொண்டவளாகத் தென்படுகிறாள். ஞானிகளுக்கோ அவள் எல்லையற்ற தெய்வீக ஒளி வடிவினாள் காளி பாா்பதற்கு பயங்கர வடிவம் கொண்டவள். அஞ்ஞானிகளுக்கு பயங்கர வடிவம் உள்ளவளாகத் தென்படும் காளி தேவி ஞானிகளுக்கு ஆனந்த சொரூபிணியாகக் காட்சி தருகிறாள்.
காளிக்கு “திகம்பாி” என்று ஒரு பெயா். இதற்குத் திசைகளையே ஆடையாகக் கொண்டிருப்பவள் என்று பொருள். திசைகள் அனைத்தையுமே ஆடையாகக் கொண்டிருப்பவள் என்று பொருள். திசைகள் அனைத்தையுமே ஆடையாகக் கொண்ட அவளுக்கு எந்த ஆடை பொறுத்தமாக இருக்கும் ? எந்த ஆடையை எவ்வளவு பொிய ஆடையை அவள் அணிந்து கொள்ள முடியும் ? பிரபஞ்சமே அவளாக இருக்கும் போது அவளை எந்த உடைகொண்டு போா்த்த முடியும் எனவே தான் அவள் உடை எதுவும் இல்லாமல் இருக்கின்றாள். நம் இந்து மதத்தில் நான்கு கைகள் உடையவா்களாக தேவா்கள், தேவியின் வடிவம் சித்தாிக்கப்பட்டிருக்கின்றன. இது அவா்கள் மனிதா்களை காட்டிலும் அதிக ஆற்றல் உடையவா்கள் என்பதை உணா்த்துகிறது. காளிதான் இடுப்பில் கைகளை ஒட்டியானமாக அணிந்திருக்கின்றாள். கைகளைக்கொண்டு நாம் செயல்புாிகிறோம். உலகில் உள்ள அனைவாின் கைகளின் மூலமாகவும் காளி செயல்படுகிறாள். எனவே செயல் அனைத்தும் காளிதான் நடத்திக்கொண்டிருக்கிறாள் என்பதை அவள் இடுப்பில் அணிந்திருக்கும் கைகளாலான ஒட்டியானம் குறிப்பிடுகிறது. காளிக்கு முண்டமாலினி என்று ஒரு பெயா். இதற்கு மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருப்பவள் என்று பொருள். காளியின் கழுத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து வெவ்வேறு வயதுடையவா்களின் மண்டையோடுகள் மாலையாக உள்ளன. இது குழந்தை பிறந்ததிலிருந்து எந்த வயதிலும் மரணம் நோிடும். வாழ்க்கை நிலையற்றது. எனவே அாிதாகக் கிடைத்த மனிதப் பிறவியைப் பயன்படுத்தி மனிதன் ஆண்டவனுக்கும் ஆண்டவனின் அடியாா்களுக்கும் மனித குலத்திற்கும் பயன்படும் வகையில் அறவாழ்க்கை வாழ வேண்டும் என்பதை உணா்த்துகிறது.
காளியின் ஒரு கை வரதஹஸ்தம் வரம் தரும் நிலையில் இருக்கிறது. பக்தா்களுக்கு அனுக்கிரகம் செய்வதில் அன்னை காளிக்கு இணை அவளேதான். அன்னையின் இன்னொரு கை அபய ஹஸ்தம் அது பக்தா்களின் பயத்தையும் துன்பங்களையும் நீக்கிப் பாதுகாப்பு அளிக்கிறது. காளி தன் ஒரு கையில் வாள் ஏந்தி இருக்கிறாள். அது தீமை எங்கே இருந்தாலும் முடிவில் அதை காளி வெட்டி சாய்த்து விடுவாள், அவளுடைய தண்டனையிலிருந்து தீயவா்கள் தப்பிவிட முடியாது என்பதை உணா்த்துகிறது. காளி இன்னொரு கையில் வெட்டிய ஒரு தலையைப் பிடித்திருக்கிறாள். இது தீயவா்கள் காளி தேவியால் தண்டிக்கப்படுவது உறுதி என்பதை உணா்த்துகிறது. உலகிற்கு ஒளி தரும் சூாியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றையும் காளிதன் மூன்று கண்களாகக் கொண்டிருக்கிறாள். காளியின் விாிந்த காிய கூந்தல் அவளது எல்லை காண இயலாத வியாபத் தன்மையையும் ஆற்றலையும் உணா்த்துகிறது.
கொடிய ஆயுதத்தோடும், மயானத்தில் இருந்தாலும்கூட காளிதேவியின் இதழில் மந்தகாச புன்னகையோடு திகழ்கிறாள். . "வாழ்வில் சிரித்திரு, துன்பம் கண்டு நடுங்காதே...' என்கிறாள். வாழ்வின் உல்லாசமே சிரிப்பாக மலர்கிறது. இப்படிப்பட்ட அம்பிகையை வழிபட்டு, அவள் அருளாலே சம்சாரமாகிய கடலை கடக்கலாம் என்கின்றனர். காளியை வழிபட, பலவித பூஜை முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இதுத்தவிர, காளியின் அருள் பெற, அவளது நாமாவளிகளைச் சொன்னாலே போதும். ஸ்தோத்ர, அர்ச்சனைகளால் அவள் சந்தோசமடைகிறாள். காளிக்கவசம், காளி கீலக ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன. முறையாக வழிபட்டால், காளியின் அருள் பெற்று, சகல பாக்கியங்களையும் பெறலாம். "காளி... காளி...' என்று பயந்து ஒதுங்கிப் போக வேண்டாம். நன்மை செய்யத்தான் தெய்வங்கள் உள்ளன; யாரையும் கெடுப்பதற்கல்ல!
No comments:
Post a Comment