உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.
1. காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.
2. தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
3. இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.
4. மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.
5. அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.
6. புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.
7. துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.
8. அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.
9. அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.
10. இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.
11. எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.
12. நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.
நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.. எனவே நல்ல கவனத்துடன் நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.
No comments:
Post a Comment