Saturday, February 26, 2022

விட்டமின் டி

 

விட்டமின் டி

விட்டமின் 'டி' யை எவ்வாறு நாம் பெறுவது எனத் தெரியுமா?

விட்டமின் டி நமது உடல் அமைப்பில் பெரும்பங்கு வகிக்கும் ஒரு விட்டமின் சத்து. நல்ல திடமான எலும்பு வளர்ச்சிக்கு விட்டமின் டி கட்டாயம் தேவை. இது நோயெதிர்ப்புத் திறனை ஒழுங்குபடுத்துகிறது. நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் விட்டமின் டி தேவைப்படுகிறது.

உடலிலுள்ள மொத்த எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவை கால்சியம் ஆகும். இந்த கால்சியம், அதுவாகவே உடலுக்குள் உட்கொள்ள முடியாது. அதற்கு விட்டமின் டி யின் உதவி தேவை. விட்டமின் டி உடலில் 'கால்சிட்ரையால்' என்ற நிலையில் இயங்குகிறது. இது உடலில் ஹார்மோனாக மாறி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களை உறியச் செய்கிறது. அவற்றை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இவ்வாறுதான் நாம் கால்சியம் சத்தினை, பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு பெறுகிறோம்.


விட்டமின் டி குறைந்தால் என்னாகும்?


விட்டமின் டி போதிய அளவு கிடைக்கவில்லையென்றால், நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கும். எலும்புகள் பலவீனமாகும். குழந்தைகளுக்கு மிகவும் குறைவாக இருந்தால், ரிக்கட்ஸ் என்ற நோய் தாக்கும். இதனால் எலும்புகள் மிருதுவாகி, பலமிழக்கக் கூடும். நடக்க இயலாதபடி ஆகிவிடும்.
பெரியவர்களுக்கு ஆஸ்டியோ மலேஸியா என்ற நோய் தாக்கும். இதுவும் எலும்புகளை மிருதுவாக்கி, நம்மை செயலிழக்க வைத்துவிடும்.


விட்டமின் டி எப்படி பெறுவது? 

சூரிய ஒளி : எல்லாரும் அறிந்த சூரிய ஒளிதான் அதிகமான விட்டமின் டி யை உற்பத்தி செய்யும். உணவு பொருட்களில் இருந்தாலும், மிகக் குறைந்த அளவே நமக்கு கிடைக்கும். காலை வேளையில் வரும் சூரிய ஒளியில் அதிகமாக விட்டமின் டி உள்ளது. அந்த நேரத்தில் சூரிய ஒளியில் நின்றால், நம் தோல் வேகமாக விட்டமின் டி யை உட்கிரகித்துக் கொள்ளும்.
மீன் வகைகள் : கடல் உணவுகளில் விட்டமின் டி கிடைக்கும். சாலமன் மீனில் விட்டமின் டி உள்ளது. அதேபோல் முட்டைகளிலும் விட்டமின் டி சத்து உள்ளது.


பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் : பால், தயிர் யோகார்ட் வெண்ணெய் ஆகியவற்றில் விட்டமின் டி சத்துள்ளது. எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிஸம் என்ற மருத்துவ இதழ், லாக்டோபேஸிலஸ் விட்டமின் டியை உடலில் அதிகரிக்கச் செய்யும் என்ற ஆய்வை வெளியிட்டுள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் லாக்டோபேஸிலஸ் மிகாதிகமாக உள்ளது.
மீன் எண்ணெய் : மீன் எண்ணெய் விட்டமின் டி மற்றும் விட்டமின் ஏ ஆகியவற்றை கொண்டுள்ளது. இது குழந்தைகளுக்கு விட்டமின் டி குறைபாட்டினால் வரும் நோயான ரிக்கட்ஸ் வரவிடாமல் தடுக்கும் என 20 ஆம் நூற்றாண்டில் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.


No comments:

Post a Comment