Sunday, February 27, 2022

புறநகர் மின்சார ரயில்கள்

 புறநகர் மின்சார ரயில்கள்

      நாம் பயணம் செய்யும் புறநகர் மின்சார ரயில்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா? நாடு முழுவதும் புறநகர் பயணங்களுக்கு EMU என்று சொல்லப்படும் எலக்ட்ரிக்கல் மல்டிப்பிள் யூனிட்டுகள்தான் பயன்பாட்டில் உள்ளன.(DMU என்பது டீஸல் மல்ட்டிப்பிள் யூனிட்) ஒரு யூனிட் என்பது 3 பெட்டிகளுக்கான இருக்கை வசதி கொண்ட தொகுப்பு.ஒவ்வொரு யூனிட்டும் AC 25 Kv 50 Hz சக்தி கொண்ட மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு யூனிட்டுடனும் ஒன்று / இரண்டு/ மூன்று யூனிட்டுகளை இணைப்பதையே ஆறு/ஒன்பது/பன்னிரண்டு பெட்டிகள் தொடர் என்று சொல்கிறோம்.சில வருடங்களுக்கு முன்பு வரை சில புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் 12 பெட்டி தொடர் வண்டிகள் நிற்பதற்கு ஏற்றவாறு நடை மேடைகள் நீளமாக இல்லாமல் இருந்தன.மின்சார ரயில்களின் சிறப்பு அம்சமே அவற்றின் அதிவேக சக்தி தான்.அந்த காலத்து கரி என்ஜின் பாசஞ்சர் மாதிரி இருந்தால் நாம் ஒரு நாள் கூட ஆபீஸுக்கு சரியான நேரத்திற்கு போய் சேர்ந்திருக்க முடியாது.


No comments:

Post a Comment