திருமலை திருக்கோவிலில் பாக்கவேண்டிய இடங்கள் :
• முதல்ல திருமலையில் இருந்து பாபநாசம் போகுற வழியில வேணுகோபால சுவாமி திருக்கோயில் இருக்கு.
இங்க ராமர்,லக்ஷ்மர்,சீதா தெய்வங்களுக்கு சன்னதியும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதியும் இருக்கு.
• இதுக்கு அடுத்தது ,ஜேப்பலி ஆஞ்சநேயர் கோயில் இருக்கு.
இந்த கோவிலுக்கு கொஞ்ச தூரம் நடக்கணும்ங்க ,அதுவும் செங்குத்தான பாதைல நிறையா படிக்கட்டுகள் ஏறி போனா ,சமதளமான பாதை வரும் அதுக்கு அடுத்து மறுபடியும் செங்குத்தான பாதைல இறங்கணும், கோவிலுக்கு பக்கத்துல பாதை வந்ததும் படிகட்டுகளோ சிமென்ட் தரைகளோ இல்லாம வெறும் கல்,பாறைகலால பாதை இருக்கு அதை கடந்து போனோம்னா அழகான ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகலாம்.
இங்க அர்ச்சனை செய்ய பொருள்கள் வாங்க கடைகள் இருக்கு,எப்போ போனாலும் பிரசாதம்(பொங்கல்,தயிர் சாதம்,புலி சாதம்,சாம்பார் சாதம்-னு எதாவது ஒண்ணு ) தந்துகிடே இருக்காங்க.இந்த கோவிலின் அடிவாரத்துல ஆகாசகங்கா அணை இருக்கு.
• அடுத்து ஒரு பத்து நிமிஷ பயணத்துல ஆகாசகங்கா-ங்கற இடத்தை அடையலாம்.
வரலாறு :
தினமும் திருமாலுக்கு தீர்த்த கைங்கர்யம் பணி செய்து கொண்டிருந்த மகா புருவா ஆர்ய பெரிய திருமலை நம்பிகள் அவர்கள் தினமும் அதிகாலையில் பாபவிநாசனம் சென்று நீராடி திருவேங்கடமுடையானின் திருமஞ்சனதிற்க்கும் திருவாராதனைக்கும் தீர்த்தம் கொண்டுவந்து கைங்கர்யம் பண்ணி கொண்டிருந்தார்.வயோதிக நிலையிலும் அவரது இந்த பணி தொடர்வது கண்ட எம்பெருமான் ,ஸ்ரீனிவாச சுவாமி அவரது அந்த சிரமத்தை எளிதாக்கும் பொருட்டு ஒரு நாள் ஒரு வேடுவ சிறுவனின் வேடம் கொண்டு,நம்பிகள் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் அவரை இடை மறித்து, "தாத்தா ,தாகத்துக்கு தண்ணீர் வேண்டும்" என கேட்க ,பிள்ளாய் இது எம்பெருமானுக்கு கொண்டுபோகிறேன் ,உனக்கு தந்தால் வினர்த்தம் ஆகிவிடும் என்று மறுக்க அந்த சிறுவன் பாணத்தால் தீர்த்த பாத்திரத்தில் துளை இட்டு அவர் அறியாமல் நீரை பருகிவிட்டான்.நடந்ததை அறிந்த நம்பிகள் இனி அவ்வளவு தூரம் சென்று திரும்புவதற்குள்
கால தாமதம் ஆகிவிடுமே என்று வருந்தினார்.அதற்க்கு அந்த சிறுவன் ,"தாத்தா ,கவலை வேண்டாம் என்று கூறி ,அருகில் இருந்த அஞ்சனாத்ரி மலையில் ஒரு பாணத்தால் அடிக்க ,குபீர் என்று தண்ணீர் பெருகியது .இதுவே ஆகாச கங்கை இனி இதிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லலாம் என கூறி மறைந்தான் அந்த சிறுவன் .அன்று முதல் நம்பிகள் பெருமான் அத்தீர்த்தத்தில் இருந்தே இறைவனின் கைங்கர்யத்துக்கு நீர் கொண்டுவர தொடங்கினார்.அவரது சந்ததிகளும் இன்று வரை ஆகாச கங்கை தீர்த்ததையே திருவேங்கடவுடையானின் கைங்கர்யதிர்க்காக கொண்டுவருகிறார்கள் .
• அடுத்து ,பத்து நிமிஷ பயணத்துல ,பாபநாசத்தை அடையலாம்.
பாபநாசம் (அ ) பாபவிநாசம் திருமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குற அணைக்கட்டு. திருமைலைக்கு வரும் பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும்னு நம்பரதால இந்த இடத்துக்கு இப்படி பேர் வந்துச்சாம். இந்த தீர்த்தத்தின் மேற்கு பக்கத்துல கட்டபட்டிருக்குர அணைகட்டுல இருந்து தான் திருமலைக்கு தண்ணீர் விநியோகம் நடக்குது.அதனால திருமலைல எங்க குளிச்சாலும் பாபனாசத்துல குளிச்ச புண்ணியம் கிடைக்கும்னு சொல்றாங்க.
திருப்பதியில் மொத்த 14 தீர்த்தங்கள் இருக்காம். அது என்ன என்னனு தெரியுமா?
1. சுவாமி புஷ்கரணி:- இது சரஸ்வதிதேவி தவமிருந்த இடமாம் இங்கதான் ஆதிவாராக மூர்த்தி எழுந்தருளி இருக்கார் . மார்கழி மாத வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்ய உதயதத்திற்கு 6 நாழிகை முன்பும், சூர்யோதயத்திற்கு நாழிகை பின்பும் இம்மலையிலுள்ள மற்ற எல்லா தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆகுதாம்.
2. பாபவிநாசம்: மலையிலேயே இன்னொரு புண்ணிய தீர்த்தம். ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் உத்திராட நட்சத்திரம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு தீர்த்தங்கள் சங்கமமாகின்றனவாம். அன்றைய தினம் இந்த தீர்த்தத்தில் நாம் நீராடினால் இக்கலியுகத்தில் செய்த பாவங்கள் எல்லாம் போய்டும் அப்படீங்குறது ஐதீகம்.
3. ஆகாய கங்கை:- தினம் தோறும் அதிகாலைல பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீர்த்தத்தாலே வெங்கடவனுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறுதாம் . இங்கு சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியில் நீராடுவது விசேஷமாம்.
4. ராமகிருஷ்ண தீர்த்தம்:- தை மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் சித்திகள் சித்தியாகுமாம்.
5. பாண்டவ தீர்த்தம்:- வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமைகள் இதில் நீராடினால் பல பாவங்களிலிருந்து விடுபட முடியுமாம்.
6.தும்புரு தீர்த்தம்:- பங்குனி மாத பவுர்ணமியன்று இதில் நீராடினால் தும்புரு முனிவரின் நல்லாசி கிடைக்கும். இவையல்லாது,
7, வைகுண்ட தீர்த்தம்,
8. ஜடாயு தீர்த்தம்,
9. சகஸ்ந்தன தீர்த்தம்,
10. கோனேரி தீர்த்தம்,
11. சக்ர தீர்த்தம்,
12.வகுள தீர்த்தம்,
13. சேஷ தீர்த்தம்,
14. மொரதீர்த்தம்
என பதினான்கு வகை தீர்த்தங்கள் மலை மீது இருக்காம்.
.
• ஸ்ரீவாரி பாதம் :
திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இங்க இருந்து பார்த்தா திருமலையோட முழு வ்யூ -ம் அவ்ளோ அழகா தெரியும்.
• அன்னப்பிரசாதம் :
திருமலைல அன்னப்பிரசாதம் ,விசேஷமான ஒண்ணு.தினமும் பல ஆயிர கணக்கான பேர் வந்து சாப்பிடுறாங்க.கவுண்ட்டர் 1,கவுண்ட்டர் 2-னு நிறையா கவுண்ட்டர்கள் இருக்கு.ஒரு கவுண்ட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பேர் உக்காந்து சாப்படற அளவுக்கு பெரிய ஹால். அப்போ அங்க இருக்குற அத்தனை கவுண்ட்டர்லையும் எவ்ளோ பேர் சாப்பிட்ராங்கனு பாருங்க.அங்கேயே இந்த வருஷத்துக்கான அன்னப்ப்ரசாத ஸ்பான்சர்கள் யார் யார்னு LED டிஸ்ப்ளே வச்சுருக்காங்க.
தானத்துலையே சிறந்த தானம் அன்னதானம்னு சும்மாவா சொன்னாங்க.
திருப்தி போயிட்டு திருமாலை மட்டும் பாத்துட்டு வராம,அங்க இருக்குற மத்த கோவிலுக்கும் போய்ட்டு ,இயற்க்கை அழகை ரசிச்சிட்டு கடவுளோட + இயற்கையோட அருள் பெற்று வாங்க..
No comments:
Post a Comment