Tuesday, May 2, 2023

தஞ்சாவூர் ஜில்லா பண்பாடு

 தஞ்சாவூர் ஜில்லா பண்பாடு 

 

ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாகாரர் எழுதியது

 

நான் ரசித்த  அநுபவித்த மறக்க முடியாத எங்கள் தஞ்சாவூர் ஜில்லா

 

வடக்கே சிதம்பரம் 

கிழக்கே நாகப்பட்டிணம் 

  வேதாரண்யம் வங்கக்கடல் 

மேற்கே பெரம்பளூர்

தெற்கே திருச்சி

என அகண்ட  பரந்து விரிந்த ஜில்லா 

 

பண்பாடு  பாரம்பரியம் கொடை கருணை தானம் தருமம் அகந்தை 

ஆதிக்கம் செவரணை என குணங்கள் கொண்ட  எங்கள் தஞ்ஜை

 

எல்லா மாதமும் திருவிழாதான்

 

காவேரியில் தண்ணீர் வந்தால்

வீட்டுக்கு மஹாலக்ஷ்மி வந்த மாதிரி ஒரு வரவேற்பு இருக்கும் 

 

ஆற்றில் ஊர்ந்துவரும் பொன்னியை

தூப தீபம் காட்டி  விழுந்து சேவிப்பார்கள் 

 

சோழன் தேசம்  உலகம் போற்றும் ஸ்ரீ ப்ருகதீஸ்வரர் திருக்கோவில் 

 

தமிழில் புலவனாக வேண்டுமா?  இருக்கிறது

தஞ்ஜை கருந்தட்டான்குடி தமிழ்ச் சங்கம்

 

பாத்திரங்கள்  நகைகள் வாங்க வேண்டுமா  இருக்கிறது 

கும்பகோணம் 

 

மளிகை மண்டிக்கு இருக்கிறது 

மாயவரம் 

 

காய்கறிகள்  வெத்தலை வாழை இலைகள் பழங்கள் வாங்க  இருக்கிறது 

திருவையாறு 

 

பட்டு சேலை பட்டைக்கறை வேஷ்டிக்கு

திருபுவனம்

 

ஆழித் தேருக்கு

திருவாரூர் 

 

திருநாவுக்கரசர் பதிகம் பாடி கதவைத் திறந்த 

திருமருகால் ஈசன் திருக்கோவில்

 

நந்தநாருக்காக நந்தி விலகி வழிவிட்ட 

திருப்பூன்கூர் திருக்கோவில்

 

ஈசன் களிப்புடன் தாண்டவமாடிய

ஆனந்ததாண்டவபுரம்

 

திருமணம் ஆகாத மனக்குறைக்கு பரிகாரம் காண

திருமணங்சேரி

 

தரித்த கரு சிதறாமல் காத்தருளும்

கர்பரக்ஷாம்பிகை திருக்கோவில்

 

நவகிரக ஸ்தலங்கள் 

 

கோடை காலத்தில் திண்ணையில் வெள்ளி கூஜாவில் தண்ணீர்

கும்பகோணம் வெத்தலை வறுத்த சீவல் பெரப்பம்பாய் விரித்து

அதில் அமர்ந்து பத்துபேர் ஆடும் சீட்டுக் கச்சேரி  பாயின்டுக்கு பத்து பைசா என ஆடும் ரம்மி சீட்டாட்டம் அந்தனை பேரும் சொந்தங்கள்

எனவே காசு சொந்தத்தில் கைமாறும்

 

கோவிலில் நடக்கும்  பாட்டுக் கச்சேரி 

 

ஸ்வாமி புறப்பாடு  நாலு வீதிகளிலும்  விடிய விடிய நாதஸ்வர கச்சேரி 

 

களைகட்டும் மல்லாரி புறப்பாடு  எட்டு சிறப்புத் தவில் 

 

சங்கீதமும் வாழ்வில் ஒரு சுவைதான்

 

ஊருக்குள் யாராவது வந்து விலாசம் கேட்டால் அவர்களை அந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லும் சிறுவர்கள் 

 

கொளந்த நல்லா இருக்கீங்களா என்று பாசத்துடன் சிறுசை விஜாரிக்கும்

கிராமத்து பெரிசுகள்

 

நாலு இட்லிக்கு ஒரு தூக்கு நிறைய சாம்பார் தரும் பிராமணாள் காப்பி கிளப்கள்

 

மொந்தன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பேயன் பழம் 

பூவன் பழம் இப்படி பருவ காலத்திற்கு ஏற்ப பலவித பழங்கள் விளையும் பூமி

 

பேர் சொல்லும் தஞ்ஜாவூர் கதம்பம்

 

ஒட்டு மாங்கா கௌதாரி  நீலம்  ருமானி மாங்காய் வகைகள் மாயவரம் ஸ்பெஷல் பாதிரி மாம்பழம் 

 

பலாப்பழம்  கொய்யா பம்ப்ளிமாஸ் கிடாரங்காய் வீட்டுக்கு வீடு புளிய மரம் 

 

சில்க் ஜிப்பா 

பட்டைக்கரை திருபுவனம் வேஷ்டி 

கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரம்

காதில் வைரக் கடுக்கண் 

வாய்க்கு கொழுந்து வெத்தலை 

பன்னீர் புகையிலை 

வறுத்த சீவல் 

கஷ்கத்தில் எவர்சில்வர் வெத்தலைப்பொட்டி 

 

எம்பவும் சவாரிக்கு தயாராக நிற்கும் 

அழகிய மாட்டு வண்டி 

கொம்பு சீவிய காங்கேயம் காளைகள் 

 

கொம்பில் ஒரு குப்பி 

அதில் தொங்கும் குஞ்சலம் 

 

பட்டைத் தோலில் 

சரமாகத் தொங்கும் 

ஜல் ஜல் சலங்கை

 

தார் ரோடில் வரிசையாக 

ஓடும் வண்டிகள்

 

புழுதிபறக்க செல்லும்

பண்ணையாரின் அம்பாசிடர் கார்

 

பஸ் ட்ரைவருக்கு 

அண்ணே 

பின்னால ப்ளஷர் 

வழிவிடுங்க என்று சொல்லும் கண்டக்டர்

 

கொல்லைப்புறம் 

மாட்டுக் கொட்டா 

அதன்பின் 

பத்தடி நடந்தால் ஒரு வாய்க்கால்

 

ஒரு பொட்டுக்கூடை நிறைய 

பித்தளை பாத்திரங்கள்

காப்பி பித்தளை டபாரா

பாத்திரங்களை எடுத்துச் சென்று 

சுத்தம் செய்து எடுத்து வரும் 

பாட்டி 

ஊருக்குள் குறைந்தது 

ஐந்து கோயில்கள் 

ஐந்து குளங்கள் இருக்கும் 

 

கிராமத்தை இருபுறமும் 

சுற்றி ஓடும் ஆறுகள் 

 

ஊருக்கு வெளியே 

ஒரு டென்டுக் கொட்டா சினிமா 

 

ஊருக்கு மறைவிடத்தில் 

ஒரு கள்ளுக் கடை 

 

பசுமை 

வளமை 

 

இன்னும் 

எத்தனையோ 

 

என்ன ஓய் 

நான் தஞ்ஜாவூர்காரன்

No comments:

Post a Comment