Friday, July 19, 2024

திருநெல்வேலி மாவட்டசிறப்பம்சம்

 திருநெல்வேலி மாவட்டசிறப்பம்சம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் பெருமைக்குறியவர்களே! மகிழ்ச்சி!

Today is Tirunelveli ‘s 226 year anniversary. In the year 1790 the  British created Tirunelveli. 

 Thiru- Respect 

Nel-   Rice grain 

Veli-   Security 

 இன்று....

திருநெல்வேலி நகரத்தின் 226 வது மலர்ந்த தினம். 1790ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான் திருநெல்வேலி.

 திரு=மதிப்பு 

நெல்=உணவு

வேலி=பாதுகாப்பு

 *திருநெல்வேலி* பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா?

 10 சிறப்பம்சங்களை கொண்டது.

 1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்*

 2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவதலம் பெற்ற நகரம்.

 3) தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரை கொண்ட மாநகரம்.

 4) நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம்.

 5) ஐந்து வகையான *நிலங்கள்* பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம்.

 6) தமிழ்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய நகரம்.

7) சரிகமபதநிச என்ற ஏழு ஸ்வரங்கள் பாடும் இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம்.

 8)  தினசரி எட்டு லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெருநகரம்.

 9) ஒன்பது கி.மீ சுற்றளவு கொண்ட மாநகரம்.

 10) தமிழகத்திலேயே அதிகமாக பத்து அணைகளை கொண்ட செழிப்பான மாவட்டம்.

 *தென்பாண்டி சீமை* என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென் தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கு மொழியை நெல்லைத்தமிழ் என்றும் அழைப்பர்.

 தமிழ் மொழி *பொதிகை* மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத்தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே *நெல்லைத்தமிழ்* தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது

 பெரியோரை *அண்ணாச்சி* என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

 இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. 'கிறு', 'கின்று', 'நின்று', ஆநின்று போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி

வழக்குத்தமிழில்

அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 பழகி பார் பாசம் தெரியும்...! 

பகைத்து பார் வீரம் தெரியும்...! 

 நாங்க திருநெல்வேலிகாரங்க...!   

 சித்தர்களில் சிறந்த *அகத்தியர்* வளர்ந்த இடம் - திருநெல்வேலி 

 காப்பியத்தின் மன்னன் *தொல்காப்பியர்* வளர்ந்த இடம் - திருநெல்வேலி

 வீரத்தின் அடையாளம் பாஞ்சாலங்குறிச்சி- திருநெல்வேலி

 தியாகத்தின் தியாகி *வாஞ்சிநாதன்* பிறந்த இடம் - திருநெல்வேலி 

 முதன் சுதந்திரபோராட்ட வீரன், வீரத்தை முத்தமிட்ட *வீரபாண்டிய கட்டபொம்மன்* - திருநெல்வேலி 

  முதன் முதலாக    ஆங்கிலேயர்கள்  ஆயுதக்கிடங்குகளை  மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்திய  "படை தளபதி  முதல் தியாகி வீரன் சுந்தரலிங்கம்". கவர்னகிரி-ஓட்டப்பிடாரம்.

 நாளிதழ்களின் அரசர் *சிவந்தி ஆதித்தனார்* பிறந்தது - திருநெல்வேலி 

 கலைத்துறையின் *singam ஹரி* - திருநெல்வேலி 

  தமிழகத்தை அண்ணார்ந்து பார்க்க வைத்த நிகழ்ச்சி *நீயா நானா* இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் - திருநெல்வேலி

  திருநெல்வேலிக்காரன் சாதிக்காத துறையும் இல்லை, கலையும் இல்லை

 தாகத்துக்கு *தாமிரபரணி*

 அருவிக்கு *குற்றாலம்*

 தென்றலுக்கு *தென்காசி*

 புலிக்கு *முண்டந்துறை*

அப்பளத்திற்கு... *கல்லிடைக்குறிச்சி*

 அழகுக்குக்கு *சேரன்மகாதேவி*

 படிப்புக்கு *பாளையங்கோட்டை*

அணைக்கட்டுக்கு *பாபநாசம்*

 *ஆளை புடிக்க அல்வா*

*ஆளை சீண்டினால் அருவா*

 தமிழுக்காக  பாடுபடுவதில் திருநெல்வேலி ரத்தங்களுக்கு

அன்றும் இன்றும் என்றும் பெரிய பங்கு உண்டு.

No comments:

Post a Comment