Friday, July 26, 2024

காபி டீ குடிக்கும் விதம்

 காபி டீ குடிக்கும் விதம்



நீங்கள் டீ காபி குடிக்கும் விதம்
உங்கள் சுபாவத்தை சொல்கிறது.


நீங்கள் டீ காபியை சூட்டோடு சூடாகவும்
வேகமாகவும் குடிப்பவராயின் நீங்கள் விரும்பும் ஒன்றை துணிந்து செய்யவதில் பேரார்வம் கொண்டவர், அதில் வரும் சவால்களை எதிர்க்கும் திறமை கொண்டவர் என்று அர்த்தம்.

ப்ளீஸ்
நீங்கள் டீ காபியை சர்க்கரை அதிகம் போட்டுக் குடிப்பவராயின் அதிகம் சிந்திப்பவர், நினைத்ததை செய்பவர்,
எதனையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர் என்று அர்த்தம்.

நீங்கள் டீ காபியை ஸ்ட்ராங்காக குடிப்பவராயின் எதனையும் தத்துவார்த்தமாக அணுகக் கூடியவர். தலைமைத்துவ ஆளுமை கொண்டவர், கட்டளைத் தளபதியாக இயங்கும் தன்மை கொண்டவர் என்று அர்த்தம்.

நீங்கள் டீ காபியை கசப்பாக, கசட்டையாக குடிப்பவராயின் உற்சாகமானவர், பொய் பேசப் பிடிக்காதவர், ஒரே ரோட்டீனை விரும்பாதவர் என்று அர்த்தம்.

நீங்கள் டீ காபியை சூடு தணிந்து, ஆறிய பின்னர் குடிப்பவராயின் மிருதுவான சுபாவம் கொண்டவர், பொறுமைசாலி, ஆற அமர தீர்மானங்கள் எடுப்பவர் என்று அர்த்தம்.

நீங்கள் டீ காபியே குடிக்காதவர் என்றால் ஒதுங்கி வாழ விரும்புபவர், எதிர் மறையாக சிந்திப்பவர், யார் மீதும் நம்பிக்கை வைக்காதவர் என்று அரத்தம்.

நீங்கள் யார் என்று இப்போது சொல்லுங்கள்

No comments:

Post a Comment