Friday, July 26, 2024

ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான்

ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான்

ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகள்.... என்னென்ன?

கல்யாண தினத்தன்று ஐயர் / பாதிரி / முல்லா சொல்வது புரியுதோ புரியலையோ, மனதுக்குள் 'இனி இவளைத் தவிர வேற ஒருத்தியையும் மனசால கூட நினைக்கக் கூடாது' என சத்தியப் பிரமாணம் செய்து கொள்கையில்

* பிரமாணம் எடுத்த அடுத்த நொடியே மனைவியின் நண்பிகள் வாழ்த்த வரும்போது "இத்தனை நாள் எங்கம்மா இருந்தீங்க நீங்கள்ளாம்!" என்று நினைத்து மனதுக்குள்ளேயே மண்டையில் கொட்டிக் கொள்கையில்

* மணமான பின் மனைவியைத் தாங்கினால் அம்மா, அக்கா முகம் சுளிப்பார்களோ என்றும் இவர்களை சப்போர்ட் பண்ணினால் மனைவி பரணில் ஏறி அமர்ந்து விடுவாளோ என்று இது வரை அனுபவித்திராத ஒரு அவஸ்த்தையை அனுபவிக்கையில்

* கர்ப்பமான மனைவியின் harmone-imbalance அவளைப் படுத்தும் பாட்டுக்கு இணையாக எல்லா ஹார்மோனும் balanced ஆக இருக்கும்போதே மண்டை காய்ந்து போகையில்

* அவளுக்கு வலி வரும்போதெல்லாம் தனக்கும் வலிக்கையில்

* 'குழந்தை உதைக்குதுங்க!' என்று அவள் சொல்கையில் அவளுக்குத் தெரியாமல் ஆனந்தக் கண்ணீர் விடுகையில், " இது என்னா அதிசயம்டா" என்று அதிசயிக்கையில்

* பத்து மாசம் அவள் குழந்தையைச் சுமக்க, தான் வாழ்நாள் முழுக்க குடும்பத்தையே சுமக்கையில்

* அப்படிச் சுமக்கினும் 'நானெல்லாம் சரியான கணவன் / தகப்பன் இல்லை', performance போதாது என்ற ஒரு வித குற்ற உணர்வில் இருக்கையில்

* குழந்தை பிறந்த பின் எங்கிருந்தோ வரும் அசுர பலத்தில் அக்குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஓடாய்த் தேயத் தயாராகி விடுகையில்

* மிகப்பளுவான சூட்கேஸையோ அரிசி மூட்டையையோ தூக்கி எளிதாக அப்புறப்படுத்தி விட்டு

பச்சிளம் குழந்தை டிஷ்யூம் என்று குத்துகையில் காத தூரம் போய் விழுந்து மகிழ்விக்கையில்

* அதையே ஓராயிரம் முறை செய்ய வேண்டியிருப்பினும் ரெடியாக இருக்கையில்

* தான் பட்டினி கிடந்தாலும் குழந்தை, மனைவிக்கு உணவு கிடைக்க வகை செய்யத் துடிக்கையில்

* குடும்பத்துக்காக செக்கு மாடாக உழைக்க வேண்டுமென்றாலும், சாக்கடையில் இறங்க வேண்டுமென்றாலும் அதி உயர டீவி டவரில் ஏற வேண்டுமென்றாலும் தயாராகி விடுகையில்

* மணமான பெண் புகுந்த வீடு கிளம்புகையில் இதயத்தை அறுத்த மாதிரி துடித்தாலும் வெளிக் காட்ட முடியாமலும் அப்படி நடிக்கத் தெரியாமல் தவிக்கையில்

* மனைவி தனக்கு முன் மறைந்து விட்டால் தன்னால் ஒன்றுமே செய்ய இயலாது போனாலும் போகும் என்று நன்கு அறிந்திருந்தாலும்...

அவளுக்கு முன் தான் மறைந்து அவளைத் துன்பத்துக்கு ஆளாக்கக் கூடாது என்று விரும்புகையில்

No comments:

Post a Comment