தொண்டைக்குள் நழுவிச்செல்லும் ஆற்காடு மக்கன் பேடா..
· பல வரலாற்று சுவடுகளை தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் மிகப்பழைமையான நகரம், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு.
· பிரியாணிக்கும் புகழ்பெற்ற இந்த ஊரின் மற்றொரு சிறப்பு ‘மக்கன் பேடா’ எனும் இனிப்புத் தின்பண்டம்.
· 200 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்தப் பலகாரத்துக்குத் தாய்வீடும் ஆற்காடுதான்.
· உருதுமொழியில் ‘மக்கன்’ என்றால் ‘நயம்’ என்றும், ‘பேடா’ என்றால் பாகில் ஊறவைக்கும் ‘இனிப்பு’ என்றும் பொருள்.
· அப்படி, சொல்லுக்கேற்ப நயமாக தொண்டைக்குழிக்குள் நழுவிச் செல்லும் அமிர்த பலகாரமாக இருப்பதால், மக்கன் பேடா என்ற பெயர் வந்தது என்கிறார்கள்,
· ‘‘200 வருடங்களுக்கு முன்பு ஆற்காட்டை ஆட்சி செய்த நவாப்கள் உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்து விருந்து வைத்தனர்.
· அந்த விருந்தில் பரிமாறப்பட்ட ‘மக்கன் பேடா’ இனிப்பு பற்றி நவாப்பின் சமையற்கலைஞர்களிடம் கேட்டபோது, ‘பால்கோவாவுடன் மைதா மற்றும் உலர்பழங்களைச் சேர்த்துப் பனைவெல்லப் பாகில் ஊறவைத்தால் மக்கன் பேடா தயாராகிவிடும்’ என்றிருக்கிறார்கள்.
· இந்தச் செய்முறையைத் தெரிந்துகொண்ட முன்னோர்கள், மக்கன் பேடா தயாரிப்பதில் ஆர்வம் காட்டினர்.
· சர்க்கரைப் பாபாகுடன் மேலும் சுவைகூட்டும் வகையில் குங்குமப்பூ, அத்திப்பழம், பிஸ்தா, அக்ரூட், பாதாம், முந்திரி, சாரைப்பருப்பு, பேரீச்சை, வெள்ளரி விதை, தர்ப்பூசணி விதை, ஏலக்காய் விதை, உலர் திராட்சை, ஜாதிக்காய், ஜாதிபத்திரியைச் சேர்த்து மக்கன் பேடா தயாராகிறது.
· ஆற்காடு என்றதும் இனிப்புப் பிரியர்களின் நினைவுக்கு வருவது் இந்த மக்கன் பேடா தான்.
· ஆற்காட்டை ஆட்சி செய்த நவாப்புகள் காலத்தில் அறிமுகமான இந்த மக்கன் பேடா இன்றும் மக்களின் மனதில் மாறா ருசிக் கொண்டிருக்கிறது.
· வேலூர் மாவட்டத்தில் நடக்கும் வீட்டு விசேஷங்கள், திருவிழா, பண்டிகை நாட்களில் மக்கன் பேடா கட்டாயம் பரிமாறப்படும்.
· பால்கோவா, மைதா, தயிர், நெய் மற்றும் பலவகையான உலர்பழங்களை பதமாக பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுத்து தயாரிக்கப்படுவதுதான் இதன் ருசியின் ரகசியம்.
· காண்பதற்கு ‘குலோப்ஜாமூன்’ போன்று இருக்கும் இந்த மக்கன் பேடா சுவையை நாவின் அரும்புகள் அனைத்திலும் உணரச் செய்கிறது.
· இன்றளவும் புகழ்பெற்ற ஒரு இனிப்பாக மக்கன் பேடா உள்ளது.
· இந்த மக்கன் பேடா தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது.

No comments:
Post a Comment