Followers

Saturday, July 25, 2026

இந்திய நாணயங்கள்

இந்திய நாணயங்கள்

இந்திய அரசால் அந்ததந்தப் பகுதி வரலாற்றுச் சின்னங்கள் பொறித்தும் தேசியத் தலைவர்கள் உருவம் பொறித்தும் வெளியீடு செய்யப்படுவது Commemorative Coin என்று சொல்லப்படும் நினைவு நாணயங்களாகும்.

இந்த நாணயங்கள் 1 ரூ, 2 ரூ, 5 ரூ, 50 ரூ, 75 ரூ, 100 ரூ, 150 ரூ, 1000 ரூ என்ற மதிப்பில் நாணயங்கள் அச்சிடப்படும். நாணயங்கள் அச்சிடுவதில் சில விதிமுறைகள் உள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட நாணயங்கள் தேவநாகரி + ஆங்கிலம் என்ற இரண்டு எழுத்துருக்கள் மட்டும்தான் இருக்கும். தமிழோ, மராத்தியோ, தெலுங்கோ, கன்னடமோ வேறு எந்த மாநில மொழியோ எதுவும் இருக்காது.

ஆனால், நாணயத்தில் இடம் பெறும் தலைவர்களின் புகழ் பெற்ற மேற்கோள்களோ, அவர்களது கையொப்பமோ நாணயத்தில் இடம் பெறலாம். இவைகள் அந்தந்த மாநில உள்ளூர் மொழிகளில் இருக்கலாம். ஆனால் இந்த விதி மதிப்பு கூட்டப்பட்ட 1000 ரூபாய் நாணயத்திற்குப் பொருந்தாது.

கடந்த 2010ஆம் ஆண்டு தஞ்சைப் பெரியகோவில் 1000 மாவது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் வலியுறுத்தலின்படி அப்போதைய காங்கிரஸ் அரசு நினைவு நாணயம் வெளியிட்டது. தஞ்சைப் பெரிய கோவில் முன்பாக இராஜராஜர் நிற்பது போன்ற தோற்றத்தில் இந்நாணயம் வெளியிடப்பட்டது. 1000 ரூபாய் மற்றும் 5 ரூபாய் மதிப்பில் இந்நாணயங்கள் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நாணயத்திலும் தமிழ் இருக்காது. தேவநாகரி + ஆங்கிலம் என்ற இரண்டு எழுத்துருக்கள் மட்டுமே இடம் பெறும். இதே விதிமுறைகளின் படியே தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இராஜேந்திர சோழனின் 1000 ரூபாய் நாணயத்திலும் தமிழ் இல்லை..

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட்ட மாதம் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இப்போதைய பாஜக அரசு கலைஞர் உருவம் பொறித்த நினைவு நாணயம் ஒன்றை 100 ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் இராஜ்நாத்சிங் வெளியிட்டார்.

இந்த நாணயத்தில் கலைஞரின் உருவத்தின் கீழே அவரது பொன்மொழியான "தமிழ் வெல்லும்" என்ற எழுத்துக்கள் இருப்பதைக் காணலாம். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நினைவு நாணயத்தில் அண்ணாதுரை என்ற அவரது தமிழ் கையெழுத்து இடம் பெற்றுள்ளது.

இதுவரை தமிழகம் தொடர்புடைய 7 நாணயங்கள் வெளிவந்திருக்கின்றன.

1. 1995 ஆம் ஆண்டில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக திருவள்ளுவர் படத்துடன் நினைவு நாணயம் வெளியானது.


2. 2004 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படத்துடன் ஐந்து ரூபாய் மதிப்பில் நாணயங்கள் வெளியாயின.


3. 2009 மாவது ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணாவின் படமும், அவரது தமிழ் கையெழுத்தும் பதிந்த நாணயங்கள் வெளியாயின.


4. 2010 ஆண்டு தஞ்சை பெருவுடையார் கோயிலின் 1000மாவவது ஆண்டு விழாவையொட்டி அக்கோயிலின் உருவம் பதித்த ஐந்து மற்றும் 1000 ரூபாய் மதிப்பில் நாணயங்கள் வெளியாயின.


5. 2017 ஆம் ஆண்டு M.G.R அவர்களின் நூறாவது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், அவரது உருவப் படத்துடன் கூடிய 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டது.


6. 2024 ஆம் ஆண்டில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.

7. 2025 ஆம் ஆண்டு இராஜேந்திர சோழனின் உருவம் பொறித்த 1000 ரூபாய் நாணயம் வெளியீடு செய்யப்பட்டது.

இந்த நாணயங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படியே அச்சிடப்பட்டுள்ளனஇவ்விடயத்தில் தமிழர்கள் பெருமைபடக்கூடிய ஒரு நிகழ்வும் உண்டு. இந்திய அரசு இதுவரை வெளியிட்டுள்ள நாணயங்களில் மிக உயர்ந்த மதிப்பில் அதாவது 1000 ரூபாய் மதிப்பில் வெளியீடு செய்தது

மூன்று நாணயங்கள மட்டுமே.

ஒன்று இராஜராஜனுக்கு. மற்றொன்று இராஜேந்திரனுக்கு... மூன்றாவது பூரி ஜெகநாதருக்கு.  இதிலும் நமது தமிழ் மன்னர்கள்தான் கெத்து.



No comments:

Post a Comment