Followers

Saturday, July 25, 2026

கடம்பூர் போளி

 கடம்பூர் போளி



·         திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலைமிட்டாய் என ஊர்களுக்குப் பெருமை சேர்க்கும் தின்பண்டங்களின் வரிசையில் `கடம்பூர் போளி'யும் ஒன்று.

·         கடம்பூர் கோவில்பட்டிக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில் அமைந்துள்ள சிறுகிராமம்

·         கோவில்பட்டி அருகேயுள்ள `கடம்பூரைக் கடக்கும் ரயில் பயணிகள், இந்த போளியின் மணத்தை சுவாசிக்காமல், வாங்கி ருசிக்காமல் இருக்க மாட்டார்கள்.

·         கடம்பூர் போளி மைதா, கடலைப்பருப்பு, வெல்லம் மற்றும் ஏலக்காய் கொண்டு மென்மையாகவும், சுவையாகவும் தயாரிக்கப்படுகிறது.

·         ரயில் பயணிகளின் நாவில் நீரூறும் வகையில், நீண்ட காலமாக விற்கப்பட்டு வரும் தனித்துவமான சுவை கொண்டது

·         கடம்பூரைச் சேர்ந்த ராம சுப்பையர், கிருஷ்ணய்யர் ஆகியோர் 1960-ம் ஆண்டு அறிமுகம் செய்து விற்பனை செய்த ஒரு வகை இனிப்புப்பண்டம்தான் இந்த போளி.

·         கிருஷ்ணய்யருடன் சேர்ந்து போளி தயாரிப்பில் ஈடுபட்டு, அதைக் கற்றுக்கொண்ட குழந்தைசாமி, கடந்த 45 ஆண்டுகளாக போளி தயாரித்து விற்றுவருகிறார்.

·         கடம்பூர்ப் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ளது குழந்தைசாமியின் போளிக் கடை. தோசைக்கல்லில் நெய் தடவிப் போடப்பட்டு, மணக்க மணக்க எடுக்கப்பட்ட போளியை, வாழை இலையில் வைத்து தருகிறார்கள்.

·         இன்று கடம்பூர் போளி நாடு முழுவதுமே ஃபேமஸ் ஆனாலும் முதல் முறையாக வியாபாரத்தை ஆரம்பித்தது கடம்பூர் இரயில் நிலையத்தில் நிற்கும் இரண்டு இரயில்களில் தான்.

·         தரமும் ருசியும் இன்று அதை நாடு முழுவதும் பிரபலமாக்கி உள்ளது.

No comments:

Post a Comment