பத்தமடை பாய்
·
திருநெல்வேலி மாவட்டம்., சேரன்மகாதேவிக்கு அருகே அமையப்பெற்றுள்ள ஊர் தான் பத்தமடை.
·
இந்த ஊரில் நெய்யப்படும் பாய்கள் மிகவும் பிரபலமானவை. திருநெல்வேலியின் பல சிறப்புகளில் பத்தமடைப் பாயும் ஒன்று. மத்த பாய்களை விட, பத்தமடைப் பாய்கள் ரொம்பவே ஸ்பெஷல்.
·
தாமிரபரணி ஆற்றின் படுகைகளில் வளரும் கோரை என்னும் ஒருவகை புற்களில் இருந்து இந்த பாய் தயாரிக்கப்படுகிறது.
·
இங்கு சாதாரண பாய்கள் முதல் பட்டு பாய்கள் வரை அனைத்து பாய்களும் தயார் செய்யப்படுகிறது.
·
இந்த பாய்கள் இயற்கையாக விளையும் புற்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் உடலிற்கு குளிர்ச்சி அளிக்கிறது
·
கோரை பாய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.இதில் முதலாவது கரடுமுரடான பாய்கள்.
·
இரண்டாவது உயர்தர கைத்தறி பாய்கள்.
·
மூன்றாவது பட்டு பாய்கள். இந்த பாய்களின் மிக உயர்ந்த தரம் பட்டுக்கு ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளதால் பட்டு பாய்கள் என அழைக்கப்படுகின்றன.
·
பத்தமடை பாய்களின் வடிவமைப்புகளை சிறப்பானதாக ஆக்க அதில் வண்ணச்சாயங்கள் பூசப்பட்டு, அழகான வடிவைப்புகள் செய்யப்படும்
·
இந்த பாய்களில் பாரம்பரிய "இந்திய" வண்ணங்களான கருப்பு, பழுப்பு, ஊதா மற்றும் சிவப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
·
இவை சப்பன் மரத்திலிருந்து பெறப்பட்ட வண்ணங்கள் ஆகும்.
·
சிறப்பு பெற்ற பத்தமடை பாய்கள் தயாரிப்பதில் பத்தமடை ஊரில் உள்ள பல குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் அந்த மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளும் பெருகி உள்ளன.
·
இவ்வளவு சிறப்பு பெற்ற பாரம்பரிய பெருமை மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பத்தமடை பாய்களை நாமும் நமது வீட்டில் பயன்படுத்துவது இந்த கோடை காலத்துக்கு ஏற்றதும் கூட.

No comments:
Post a Comment