கும்பகோணம் பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை
·
பசும்பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் டிகிரி காபி, சுக்குகாபி, மற்றும் பால் இனிப்புகள் இங்கு பிரபலம்.
·
1960களில் தான் கும்பகோணம் டிகிரி காபி பிரபலமாகியுள்ளது.
·
கும்பகோணத்தில் லட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையில் தான் முதன்முதலாக தண்ணீர் கலக்காத பசும்பாலில் டிகிரி காபியைத் தயாரித்துப் பரிமாறியுள்ளனர். இந்த கடையின் உரிமையாளார்தான் பஞ்சாமி கேச ஐயர்.
·
50 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் மொட்டை கோபுர வாசல்
"லெட்சுமி விலாஸ் காபி கிளப்' இருந்தது.
·
இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்த நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும்.
·
தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.
·
அக்கம்பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபி காகத் தவம் கிடந்தனர்.
·
பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர்.
·
இதற்காகத் தனது கிளப்பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணை வைத்திருந்தார்.
·
அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசுக்கள் அசை போட்டுக் கொண்டிருந்தன.
·
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு காபி, பித்தளை தம்ளர்களில் தான் பரிமாறப்படும்.
·
கும்பகோணம் கோயில் நகரம் என்பதால் மிருதங்க வித்வான்கள், பிரபல கர்நாடக சங்கீத பாடகர்கள் இந்த கடைக்கு காபி அருந்த வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
·
இவர்கள் மூலமாகத்தான் மாநிலம் முழுவதும் கும்பகோணம் டிகிரி காபி பிரபலம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
·
இசைக் கச்சேரிகளுக்கு வந்த அவர்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியை குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப் போனார்கள்.
·
இதனால் போகுமிடமெல்லாம் "குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்' என்று பேச ஆரம்பித்தனர். இதுவே பேச்சு வழக்கில்
"கும்பகோணம் டிகிரி காபி' என பெயர் மாறியது.
·
கும்பகோணம் கொழுந்து வெற்றிலையைப் போலவே, அங்கிருந்த டிகிரி காபியும் மிகவும் பிரபலம்.
·
பஞ்சாமி ஐயரின் டிகிரி காபி கடைகள் மிகவும் புகழ்பெற்று, மற்ற கடைகளுக்கும் போட்டியாக இருந்தன.
·
பலர் பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து கடைகள் திறந்தாலும், அவர் காபி சுவையில் தனித்துவம் பெற்று, அந்தப் பகுதியில் கொடிகட்டிப் பறந்தார் என்று காபி பிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
·
பஞ்சாமி ஐயர் போல டிகிரி காபியைத் தயாரிக்க அவருக்குப் பின்னர் யாருமில்லை என சொல்லப்படுகிறது.

No comments:
Post a Comment