இந்தியாவின் வானியல் தொலைநோக்கி ஆராய்ச்சி மையம்
இது வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில்
ஜவ்வாது மலைகளில் காவலூர் என்ற சிற்றூரில் உள்ள வானியல் தொலை அமைந்துள்ளது.
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் Northern Hemisphereஐ மட்டும் தான் ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனால் இந்த பகுதிகளில் இருந்து
Northern and Southern Hemispheres களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் இந்த இடத்தின் சிறப்பு.
Southern Hemisphere ல துல்லியமாக ஆராய்ச்சி செய்ய அமெரிக்கர்கள் கூட இங்கு தான் வர வேண்டும். மற்றுமொரு முக்கியமான அம்சம் இங்கு இருந்து மட்டுமே 300 நாட்களுக்கு மேலாக திறந்த வான் வெளி Clear
Sky ) கிடைக்கின்றன.
இந்தத்தொலை நோக்கி யின் கண்ணாடி( Lens ) 2.3 ( 90 இன்ச் ) மீட்டர்
Diameter . இது முழுக்க முழுக்க இந்தியர்களால் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது.
இங்கு 6 இன்ச், 10 இன்ச் , 13 இன்ச் , 18 இன்ச் , 24 இன்ச் , 30 இன்ச் , 40 இன்ச் , 48 இன்ச் மற்றும் 90 இன்ச் Telescope பயன்பாட்டில் உள்ளது. இந்த 48 இன்ச்
Telescope ஜெர்மன் ரஷ்யா இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப் பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்தது வார்த்தைகளாளும் மற்றும் எழுத்துக்களாலும் கூற இயலாது.
இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இங்கு அனுமதிக்கபடுவார்கள்.
அவர்களுக்கு உங்கள் கண்களுக்கு பூமியை தவிர்த்து அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துனை கோள்கள் காண்பிக்கப்படும்.
உங்கள் பிள்ளைகள் பள்ளி புத்தகங்களில் மட்டும் படிக்கும் அவையை அவர்கள் புறக் கண்களுக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பு.
இங்கு பீமா அருவி நன, குழந்தைகளுக்கான பூங்கா , படகு சவாரி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு, இயற்கை மருத்துவ பூங்கா, இயற்கை மலைத்தேன், பலாப்பழம், கொய்யா, ராம் சீதா பழம் அதிகமாக கிடைக்கும்.
இங்கு தங்கும் விடுதிகள் இல்லை , வனத்துறை மற்றும் டிராவல்ஸ் பங்களா மட்டுமே உள்ளது.
உணவிற்கு ஜமூனா மத்தூர் மற்றும் ஆலங்காயத்திற்குத்தான் செல்ல வேண்டும். இது மிகவும் அடர்தியான காட்டுப் பகுதி.
இந்த இடத்திற்கு செல்ல
1. பெங்களூர்- திருப்பத்தூர்-ஆலங்காயம்-காவலூர்.
2.சென்னை-வேலூர்-வாணியம்பாடி – ஆலங்காயம்-காவலூர் ,
3. சேலம்- அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் – ஆலங்காயம்-காவலூர்
4.பாண்டிச்சேரி – திருவண்ணாமலை – போளூர் – ஜமூனாமத்தூர் – காவலூர்.

No comments:
Post a Comment