மேற்கு தொடர்ச்சி மலைகள்...
குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பறந்து விரிந்து காணப்படுவது இந்த மேற்கு தொடர்ச்சி மலை ஒரு உலக அதிசயம்.,
இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை .,
பல்லுயிர் வாழும் அற்புத சோலைக்காடுகளைக்கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள "சைலண்ட் வேலி " இடம் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான "நீலகிரி "யில், கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது.
தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக்கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது.
"வரையாடு " என்னும் அரிய உயிரினம் வாழும் ஆபூர்வ சூழல் அமைப்பை கொண்டது மேற்கு தொடர்ச்சி மலை.
மேற்கு தொடர்ச்சிமலையின்
சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன.. .இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும்
ஆற்றல் கொண்டது.
மேற்கு தொடர்ச்சி மலை ஆபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிகள், பறவைகள், பூச்சியினங்கள் வாழும் சூழலியலைக்கொண்டது.
மேற்குதொடர்ச்சிமலையின் ஆனைகட்டி மலைப்பகுதியில் "சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம்" உள்ளது.
உலகின் அதிசய மலரான, பன்னிரண்டு வருடத்திற்கு
ஒருமுறைபூக்கும் "குறிஞ்சி மலர் " நீலகிரி மலையில் பூக்கிறது.
இங்குதான் முதுமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது.
களக்காடு, முண்டந்துறை புலிகளின்சரணாலயமும் மேற்கு தொடர்ச்சி மலையின் "பொதிகையில் " அமைந்துள்ளது.