ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில்
நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை
எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் …
• இதன் மூலம் நம் உடலை தயார்
படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க
வேண்டும் …
• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின்
அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
• உள்ளே செல்லும் முன் அங்குள்ள
வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..
• அந்த படியை தாண்டும் போது, ” நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு
உள்ளே செல்கின்றேன்..
• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும்,
நேர்மறை ( நல்ல )
வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட
வேண்டும் …
• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம்
அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம்
• ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும்
மந்திரங்களாலும், நாதஸ்வரம்,
கெட்டி மேள
சத்தங்களாலும், பேசப்படும்
மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும்
நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் …
• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த
நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் …
No comments:
Post a Comment