Thursday, November 26, 2020

இரும்புச்சத்துக் குறைவு இரத்தச்சோகை

 

              இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை மிகவும் பரவலான இரத்தச்சோகையாகும் (குறைந்த அளவு சிவப்பணுக்கள் அல்லது இரத்தப்புரதம்)   இயல்பான இரத்தப்புரத அளவு: டெசிலிட்டர் இரத்தத்தில் எத்தனை கிராம் என்ற அளவில் இரத்தப்புரதம் அளவிடப்படுகிறதுஇயல்பான அளவு வருமாறு:

  • பெண்: 12.1- 15.1 கி/டெ.லி
  • ஆண்: 13.8 – 17.2 கி/டெ.லி
  • குழந்தைகள்: 11 – 16 கி/டெ.லி
  • கர்ப்பிணிப் பெண்: 11-15.1 கி/டெ.லி

நோயறிகுறிகள்

  • களைப்பு
  • சுறுசுறுப்பின்மை
  • மூச்சுத்திணறல்.

அரிதான அறிகுறிகள்:

  • தலைவலி
  • சுவையறிதலில் மாற்றம்
  • ஐஸ், காகிதம், மண் போன்ற உணவுப்பொருள் அல்லாதவற்றை உண்ணும் விருப்பம்
  • நாக்கில் புண்
  • அரிப்பெடுப்பதாக உணர்வு
  • முடியுதிர்தல்
  • விழுங்குவதில் சிரமம்

காரணங்கள்

  • சிவப்பணு சிதைவால் உண்டாகும் இரத்தச்சோகை: அரிவாள் அணு இரத்தச்சோகை, தலசேமியா போன்ற பரம்பரைத் தன்மைகளாலும், தொற்று, போதைப்பொருள், பாம்பு அல்லது சிலந்தி நஞ்சு அல்லது சில உணவுகளாலும் ஏற்படும் மனவழுத்தக் காரணிகளாலும் உண்டாகலாம்.
  • இரத்த இழப்பு: இரத்த சிவப்பணுக்களில் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே ஒருவர் இரத்தத்தை இழக்கும் போது சிறிது இரும்புச்சத்தையும் இழக்கிறார். அதிகமாக மாதவிடாய் செல்லும் பெண்களுக்கு அதிக இரத்தப் போக்கின் காரணமாக இரும்புச் சத்துக் குறைவு இரத்தச்சோகை ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்றுப்புண், இடைவெளி குடலிறக்கம், பெருங்குடல் விழுது அல்லது பெருங்குடல் மலக்குடல் புற்று போன்றவற்றால் ஏற்படும் படிப்படியான இரத்த இழப்பாலும் இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை உண்டாகலாம். மூலம், இரைப்பைச் சவ்வழற்சி, புற்று, ஊக்க மருந்தல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான புண்கள் அல்லது வயிற்றழற்சியை ஏற்படுத்தும் ஆஸ்பரின் அல்லது இபுபுரூபன் பயன்பாடு ஆகியவற்றாலும் உண்டாகலாம்.
  • உணவில் இரும்புச்சத்தின்மை: நாம் வழக்கமாக உண்ணும் உணவில் இருந்தே இரும்புச்சத்தை உடல் எடுக்கிறது. ஒருவர் இரும்புச் சத்தைக் மிகக்குறைவாக எடுத்து வந்தால் நாளடைவில் அவரது உடலில் இரும்புச் சத்து குறைவு ஏற்படும். இறைச்சி, முட்டை, கீரை மற்றும் இரும்புச் சத்து சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணலாம். தகுந்த உடல் வளர்ச்சிக்காகப் பிறந்த குழந்தைகளுக்கும் உணவில் இரும்புச்சத்து தேவை.
  • இரும்புச்சத்தை உறிஞ்ச இயலாமை: உணவில் உள்ள இரும்புச்சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுகிறது. குடல் கோளாறுகளின் காரணமாக செரிமானமான உணவில் இருந்து சத்துணவைக் குடலால் உறிஞ்ச முடியாதபோது இரும்புச் சத்துக் குறைவு சோகை நோய் உண்டாகிறது. சிறுகுடலின் ஒருபகுதி அகற்றப்பட்டாலோ மாற்றுப்பாதை சிகிச்சை செய்யப்பட்டாலோ இரும்பையும் பிற சத்துணவையும் உறிஞ்சும் திறன் பாதிக்கப்படுகிறது.
  • கர்ப்பம்: கர்ப்பிணிப் பெண்களுக்கு வளரும் கருவுக்கான இரத்தப்புரதம் கூடுதலாகத் தேவைப்படுவதால் சேமிப்பில் இருக்கும் இரும்புச் சத்தும் பயன்படுத்தப்படுகிறது, இரும்புச்சத்தை அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைவு சோகை ஏற்படுகிறது.

நோய்கண்டறிதல்

  • இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகையைக் கண்டறிய கீழ் வரும் அளவுகளைக் கணக்கிடும் இரத்த சோதனை நடத்தப்படுகிறது
  • இரத்தப்புரதம் இயல்பைவிடக் குறைவாக இருக்கும்
  • சிவப்பணுக்கள் (இரத்தப்புரதம் கொண்டவை) வழக்கத்தைவிட குறைவு
  • சிவப்பணுக்கள் இயல்பைவிட சிறிதாகவும் வெளிறியும் இருக்கலாம்
  • உயிர்சத்து  B12 அல்லது ஃபோலேட் (folate) அளவை சோதித்தல்: ஃபோலேட்,  B12 உயிர்ச்சத்துடன் இணைந்து சிவப்பணுவை உற்பத்திசெய்ய உதவுகிறது.
  • இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகையைக் கண்டறிய மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

சிக்கல்கள்

  • இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை கடுமையான அல்லது நீடித்த சிக்கல்களை உண்டாக்குவதில்லை.
  • களைப்பு: இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை நோயுள்ளவர்கள் களைப்புடனும் சுறுசுறுப்பற்றும் காணப்படுவார்கள். செயல்பாடும் ஆக்கத்திறனும் குறையும்.
  • நோய்த்தடுப்பு மண்டலம்: இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகை நோய்த்தடுப்பு மண்டலத்தை பாதிப்பதால் நோய்களும் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
  • இதய, நுரையீரல் பிரச்சினைகள்: கடும் சோகையால் பீடிக்கப்பட்ட பெரியவர்களுக்கு இதய, நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உண்டு.

உதாரணமாக:

  • இயல்புக்கு மாறாக வேகமான இதயத்துடிப்பு
  • மாரடைப்பு
  • கர்ப்பம்: சோகையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு குறிப்பாக பேறுகாலத்திலும் பின்னும் சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. பிறப்புக்குப் பின்னான மனவழுத்தமும் உண்டாகலாம்.

சிகிச்சை

உடலின் இரும்புச் சத்துக் குறைவை நிறைவு செய்ய இரும்புச் சத்து கூடுதலாக அளிக்கப்படுகிறது. பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது இரும்பு சல்பேட்டு ஆகும். வாய்வழி நாள் ஒன்றுக்கு மூன்றுமுறை எடுக்கவேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் வருமாறு:

பச்சைக் கீரைகள், இலைசெறிந்த முட்டைக்கோசு போன்றவை

  • இரும்புச் சத்து நிறைந்த தானியங்கள்
  • பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்கள்
  • பீன்ஸ்
  • கொட்டைகள்
  • இறைச்சி
  • வாதுமை
  • கொடிமுந்திரி
  • உலர்திராட்சை

சிகிச்சைக்கு மருத்துவரையே நாட வேண்டும்.

No comments:

Post a Comment