Monday, June 28, 2021

ஜிங்க் அவசியம் : எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்?

 

           வைரஸ் போன்ற மிகப்பெரிய சுகாதார பேரிடர் நிலவும் சூழல்களில் ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஒரே நாளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது என்பதால், அன்றாட உணவுகளை அதற்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டும். உணவே மருந்து என முன்னோர்கள் கூறியதுபோல் ஆரோக்கியமான உணவுகள், ஊட்டசத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும். அந்தவகையில், ஜிங்க் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் என்பதால், அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

      ஜிங்க்-ன் பங்குஜிங்க் எனப்படும் துத்தநாகம் மனித உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் தாது உணவாகும். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் நிறைந்திருக்கும் ஜிங்க், 300க்கும் மேற்பட்ட என்சைம்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் ஜிங்க் தாதுக்கு உண்டு. பசியின்மையை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், சுவையை பராமரிக்கவும் உதவுகிறது. பெண்களுக்கு 8 மில்லி கிராமும், ஆண்களுக்கு 11 மில்லி கிராமும் ஜிங்க் அவசியம்.

ஷெல் மீன்கடல் வகை உணவுகளான ஷெல் மீன், சிப்பிகள் மற்றும் நண்டுகளில் ஜிங்க் அதிகளவு உள்ளது. குறைந்த கலோரியை கொண்டிருப்பதால் இதனை உணவாக அனைவரும் எடுத்துகொள்ளலாம். கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஜிங்க் தாது தேவை அதிகம் இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு ஜிங்க் குறைபாடு இருந்தால் இந்த உணவுகளை எடுத்துகொள்ளலாம். தேவையற்ற கொழுப்பும் இதில் இருக்காது.

பருப்பு / பயிறு பருப்பு மற்றும் பயறு வகையிகளில் அதிகளவு ஜிங்க் தாது உள்ளது. அவரை பருப்பு வகைகளான அவரை, துவரை, பீன்ஸ் போன்ற பருப்பு பயிறுகளில் அதிகளவு துத்தநாகம் உள்ளது. அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ள விரும்பாதவர்களுக்கு துத்தநாக குறைபாட்டை போக்க வேண்டும் என்றால் இதனை அன்றாட டையட்டில் சேர்த்துக்கொள்ளலாம். பருப்பு மற்றும் பயிறு வகைகளில் 12 விழுக்காட்டுக்கும் அதிகமாக துத்தநாகம் உள்ளது.

 

                         நட்ஸ் மற்றும் விதைகள் விதை வகைகளான ஆளி, பூசணி மற்றும் எள் போன்றவற்றில் துத்தநாக சத்து அதிக அளவில் உள்ளது. அதாவது தினசரி தேவையான ஜிங்கில் 13% 2 மில்லி கிராம் விதைகளில் உள்ளது. மேலும், இந்த விதைகளில் இரும்புச் சத்து, நார்ச் சத்து மற்றும் ஒமேகா -3 போன்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ள. ஜிங்கில் உள்ள சத்தானது, அதிக அளவிலான கொழுப்புச் சக்தியை எதிர்த்துப் போராடவும், வளர்சிதை மாற்றத்தின் போது ஏற்படும் கதிரியக்க செயல்பாடுகளில் இருந்து உங்கள் செல்களை பாதுகாக்க உதவுகிறது. ஆளி, பூசணி விதைகளை உங்களுக்குப் பிடித்த சாலட்டுகள், சூப் மற்றும் யோகர்ட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணுவதன் மூலம் உடலில் உள்ள ஜிங் அளவினை பேணி காக்கலாம். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளிலும் அதிகளவு துத்தநாகம் உள்ளது.

                     முட்டைகுறைந்த அளவு கலோரி மற்றும் புரதம் நிறைந்த உணவு முட்டை தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. மேலும், தினமும் முட்டையை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தினசரி தேவைக்கு தேவையான 5 சதவீத துத்தநாகம் நமக்கு கிடைக்கிறது. முட்டையில் நமது உடலுக்கு தேவையான, அத்தியாவசியமான ஒன்பது அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. முட்டையில் காணப்படும் கொழுப்பு நல்ல கொழுப்பு என்பதால் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதத்தை அதிகரிக்க உதவுகின்றன. இது இதய நோய் தொடர்பான அபாயத்தை குறைக்க உதவுகிறது.

 

                            டார்க் சாக்லெட்அனைவராலும் விரும்பப்படும் டார்க் சாக்லேட்டில் தான் அதிக அளவிலான துத்தநாகம் நிறைந்துள்ளது. அதாவது 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 30 சதவீதம் ஜிங் காணப்படுகிறது. மேலும், டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால் கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. கொழுப்பின் அளவைக் குறைப்பதால் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளும் களையப்படுகிறது.

     முழு தானியங்கள்முழு தானிய உணவான ஓட்சில் அதிக அளவிலான ஜிங் உள்ளது நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் ஓட்சில் தினசரி தேவைக்கு போதுமான துத்தநாகம் 27 சதவீதம் (2.95 மிகி) கிடைக்கிறது. ஓட்ஸை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் சுறுசுறுப்பும், ஒரு நாள் முழுமைக்கும் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மேலும், ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைக்கவும், உடல் எடையை பராமரிக்கவும், இரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவி புரிகிறது.

     இறைச்சி சிவப்பு இறைச்சிகளில் உடலுக்கு தேவையான அளவிலான துத்தநாக தாது கிடைக்கிறது. ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிகளிலும் ஜிங்க் உள்ளது என்றாலும், இறைச்சி ஏற்ற அளவில் அவை மாறுபடும். அசைவ பிரியர்களாக இருந்தால் ஜிங் தேவைப்படும்போது, மட்டன் மற்றும் சிக்கனை சாப்பிடலாம்.

No comments:

Post a Comment