*சும்மா*
*"சும்மா"* இதைப் படியுங்கள்..
நிச்சயம் நீங்கள் அசந்துதான்
போவீர்கள் உலகில்
தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த
இடமே தெரியாமல் போயிருக்கின்றன! தமிழ்
மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும்
நீடித்து நிலைத்து தன்னையும், தான்
சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.
*சும்மா* சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!
அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த
*சும்மா*. அது சரி *சும்மா*
என்றால் என்ன?? பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ்
மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*
*"சும்மா"* என்கிற
இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் *15 அர்த்தங்கள்*
உண்டு என்றால் உங்களால் நம்ப
முடிகிறதா?
வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை,
நாம் அடிக்கடி கூறும் இந்த *"சும்மா"*
எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.
1. கொஞ்சம் *"சும்மா"* இருடா?
(அமைதியாக/Quiet)
2.கொஞ்ச நேரம் *"சும்மா"*
இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக்
கொண்டு/Leisurely)
3.அவரைப் பற்றி *"சும்மா"*
சொல்லக் கூடாது!
(அருமை/in fact)
4.இது என்ன *"சும்மா"*
கிடைக்கும்னு
நினச்சியா?
(இலவசமாக/Free of cost)
5. *"சும்மா"* கதை அளக்காதே?
(பொய்/Lie)
6. *"சும்மா"* தான் இருக்கு.
நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் -
(உபயோகமற்று/Without use)
7. *"சும்மா"* "சும்மா"
கிண்டல் பண்ணுறான்.
(அடிக்கடி/Very often)
8.இவன் இப்படித்தான்.. *சும்மா*
சொல்லிக்கிட்டு
இருப்பான்.
(எப்போதும்/Always)
9.ஒன்றுமில்லை *"சும்மா"*
சொல்கின்றேன் -
(தற்செயலாக/Just)
10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா"*
தான் இருக்கின்றது
(காலி/Empty)
11.சொன்னதையே *"சும்மா"*
சொல்லாதே.
(மறுபடியும்/Repeat)
12.ஒன்றுமில்லாமல் *"சும்மா"* போகக் கூடாது - (வெறுங்
கையோடு/Bare)
13. *"சும்மா"* தான் இருக்கின்றோம் -
(சோம்பேறித் தனமாக/ Lazily)
14.அவன் *"சும்மா"* ஏதாவது
உளறுவான் -
(வெட்டியாக/idle)
15.எல்லாமே *"சும்மா"* தான்
சொன்னேன் -
(விளையாட்டிற்கு/Just for fun)
நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"*
என்கிற ஒரு சொல். நாம்
பயன் படுத்தும் இடத்தின் படியும்…. தொடரும்
சொற்களின்
படியும்.. *பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* என்றால்
அது *"சும்மா"* இல்லை!
*சும்மா* வாவது சிந்தித்தீர்களா இதனை..?
உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை. ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும். இந்த *சும்மா* என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்குப் பிடித்து இருந்தால் சும்மா இருக்காமல் தமிழில் சும்மாவின் சிறப்பை அனுப்பி சும்மா இருந்தயென்னை சும்மாவது பகிரச் சொல்லியதால் சும்மா சும்மா ஏதேதோ செய்திகளைப் பகரும் நான் இன்று சும்மா செய்தியை சும்மாவே பகிர்கின்றேன்!
*சும்மா*
*படித்ததில் பிடித்தது!*
No comments:
Post a Comment