Tuesday, March 28, 2023

மயில்கள் இறக்கும் நிலை

 மயில்கள் இறக்கும் நிலை

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?

குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா

ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!

இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே  பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்..

ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்திமயில்துயில்எனும் விரதத்தை கடைபிடிக்குமாம்! கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு முதல் நாள் மட்டும் ஒரு கோமாதாவின் கோமியத்தை..

7 சொட்டு அருந்துமாம்! அப்போது மயிலின் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்! அடுத்த நொடியே அந்த பாறை பிளந்து கொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே.. தன் உயிரை விடுமாம். தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு அது பிளந்ததும் இதே போல அமர்ந்து உயிர் துறக்குமாம்! வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாம்

அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும் போது 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ

வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது அல்லவா! அதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி நம் நாட்டு தேசியப் பறவையாகவும் இருக்கிறது! இப்படி தனது மரணகாலத்தில் கூட மிகவும் அமைதியாக எந்த.. 

உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகர் கோவிலேயே நோன்பிருந்து உயிர்  துறக்கிறது மயில்கள்! விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் அடிபட்டு சாகும் மயில்களை மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டுவிடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப் புற்றுக்குள் தள்ளி..

அந்த உடலை மூடிவிடும்! இது முற்றிலும் உண்மை இது குறித்துமயிலாடுதுறை மயில்சாமி சித்தர்’  எழுதியமயில் அகவல்என்னும் நூலில் இத்தகவல்கள் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது! மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு..

ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும்.!!

தோகை விரிக்கும் போது மயில்களுக்கு உடல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும் உங்களுக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா

மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய மயில் அகவல் என்னும் நூல் கிடைத்தால் படியுங்கள்.

Friday, March 10, 2023

இன்ப்ளூயன்சா H3N2


இன்ப்ளூயன்சா  H3N2


  இன்ப்ளூயன்சா வகை வைரஸின் H3N2 திரிபு வைரஸ் தற்போது நமது நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது

அதீத காய்ச்சல் (101 டிகிரி ஃபாரன்ஹீட்களுக்கு மேல்தொண்டை வலி  விடாத வறட்டு இருமல்  குமட்டல் / வாந்தி  உடல் வலி / சோர்வு   தலைவலி போன்றவை இந்த வைரஸ் தொற்றின்  அறிகுறிகளாக இருக்கின்றன

ஐசிஎம்ஆர் ஆய்வுகளின் படி  இந்த தொற்றினால்  எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள் , முதியோர்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் நோய் வெளிப்பட வாய்ப்பு உண்டு

மேற்சொன்ன அறிகுறிகளுடன்

மூச்சுத்திணறல் , மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி , எதையும் சாப்பிட முடியாத அளவு சுணங்கிக் கிடப்பதுதலைசுற்றல், வலிப்பு  போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்

மீண்டும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும் 95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.  90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்

சுய மருத்துவம் ஆபத்தானதுபொன்னான நேரத்தை சுயமருத்துவம் செய்து கழிப்பது தவறுகுழந்தைகள் முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல்  இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும் 

 

அடுத்த சில வாரங்களுக்கு  எதிர்ப்பு சக்தி குன்றிய முதியோர் குழந்தைகளை அத்தியாவசியமின்றி வெளியில் கூட்டமான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது  அத்தியாவசியமற்ற பயணங்களை சற்று தள்ளிப்போடுவது சிறந்தது 

பொது இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவது  தொற்றுப் பரவலை தடுக்கும் சிறந்த நடைமுறை  தொற்று ஏற்பட்டு காய்ச்சலுடன் இருப்பவர் காய்ச்சல் குணமாகும் மட்டுமேனும் வீட்டில் தம்மை தனிமைப் படுத்திக் கொண்டால் தொற்றுப் பரவலை தடுக்க இயலும்  கைகளை சோப் போட்டு  அடிக்கடி கழுவ வேண்டும். எச்சிலை பொது இடங்களில் துப்பக் கூடாது

இந்த வைரஸ்க்கு எதிராக வேலை செய்யும் வைரஸ் கொல்லி மருந்துகள் குறிப்பாக ஒசல்டாமிவிர் நம்மிடம் இருக்கிறது. எனினும் தீவிர நோய்  ஏற்பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே வைரஸ் கொல்லி மருந்துகள் போதுமானது. சாதாரண தொற்று நிலையில் இருப்பவர்களுக்கு பன்றிகாய்ச்சல் எதிர்ப்பு வைரஸ் கொல்லி மருந்து தேவையில்லை

இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக்  கொல்லும்  ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது

காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் மருந்து  மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகள்  குளிர்ந்த நீரில் உடல் முழுவதும் ஒத்தி எடுப்பது  நீர்ச்சத்து நிரம்பிய ஆகாரங்களை உட்கொள்ளுதல்  .ஆர். எஸ் திரவத்தைப் பருகுதல்  நல்ல ஓய்வு  இந்த தொற்றில் இருந்து மீள உதவும் 

குழந்தைகள் முதியோர்கள் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு தொற்று அறிகுறிகளில் அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக செயலில் இறங்கி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்

பெரும்பான்மையினருக்கு சாதாரண சீசனல் ஜுரமாகக் கடந்து செல்லும் தொற்று இது  இது குறித்து அதிக அச்சம் தேவையில்லை எனினும் எச்சரிக்கை செய்வதற்கே இப்பதிவு  எச்சரிக்கையுடன் இருப்போம்  எதிர்வரும் சவாலை வெல்வோம்