ஆதார்-பான் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா?
முன்னதாக, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ இணையதளமான
WWW.incometaxindiaefiling.gov.in/home என்ற பக்கத்திற்கு செல்லவும். அங்கு Verify Your PAN
Details சென்று PAN எண், பெயர் குறிப்பிட்டு உங்கள் பான் கார்டு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளுங்கள். பான் அட்டை செயலில் உள்ளதா இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்ததாக,
1. WWW.incometax.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
2. ‘Link aadhaar status’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும்.
3. உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு View Link ஆதார் Status என்பதை கொடுக்கவும்.
4. ஆதார்-பான் இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்து பதில் காண்பிக்கப்படும்.
5. ஆதார்-பான் இணைக்கப்படவில்லை என்றால் அதுகுறித்தும் நோட்விகேஷன் காண்பிக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படவில்லை என்றால் WWW.incometax.gov.in என்ற இணையதளத்தில் ‘Link aadhaar’ கொடுத்து மார்ச் 31-க்குள் இணைக்கவும்.
No comments:
Post a Comment