தயிர் சாதம்
சாதம் ஆறதுக்குள்ள, ஜிலுஜிலுன்னு கொஞ்சம் பச்சை மிளகா, இஞ்சி, கொத்தமல்லி, எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும்.
இப்போ சாதம் ரெடியாகி ஓரளவு ஆறினதும், கெட்டித் தயிரை அதோட தலையில் விட்டு, உப்பு போட்டு கரண்டியால ஜோரா மசிச்சு கலக்கணும். வெண்ணை போட்டால், தயிருக்கு தன்னோட இனத்தைப் பாத்த சந்தோஷத்துல ஜோரா ரெண்டும் ஒண்ணா சேர்ந்து, தயிர்சாதம் இப்போ வெண்ணைக்கட்டியா இருக்கும்.இப்போதான் மிளகா, இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி போடணும். நல்லா ஆறின சாதத்துலதான் போடணும். இல்லாவிட்டால் பச்சைக் கலர் பிரௌன் கலரா மாறிடும்.அந்தநேரத்தில் ஒரு கரண்டியில நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகா வத்தல் தாளிச்சு, அழகா பிரௌன் கலருக்கு உளுந்து மாறினதும், தயிர்சாதத்துல போடணும். கரண்டியில சாதத்தை எடுத்து விட்டா, அப்புடி வழியணும்.
No comments:
Post a Comment