Friday, March 10, 2023

தலையாட்டி பொம்மையும் - தஞ்சைப் பெரியகோவிலும்..!!

 தலையாட்டி பொம்மையும் - தஞ்சைப் பெரியகோவிலும்..!!



தலையாட்டி பொம்மைக்கும் , தஞ்சை பெரியகோவிலுக்கும் , தஞ்சாவூரில் அந்த பொம்மை தயாரிக்கப்படுகிறது என்பதை விட வேறு என்ன தொடர்பு ??

இருக்கின்றது... ? இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ளே ஒரு தத்துவத்தையே ஒளித்து வைத்திருக்கிறார்கள் !

களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை !

கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் , களிமண்ணால் செய்யப்பட்ட , ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது !!

அந்த பொம்மையின் அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள் !! அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்தப் பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். !!

இதற்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.!! நம்முடைய பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டிருக்கிறது ...!! தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை !! ஒருவகையான மணல் வந்திருக்கிறது !!

இந்த மணல் காட்டாறுகளில் காணப்படக்கூடிய மணல் !! சாதரண ஆற்று மணலுக்கும் இந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கின்றது !!.

சாதாரண ஆற்று மணலை விட , காட்டாறுகளில் காணப்படும் மணல் , பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலைக் காட்டிலும் கடினமானது !!

கோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை கொண்டு அடியில் நிரப்பியிருக்கிறார்கள் !! இந்தத் தகவலை அறிந்த தஞ்சை பெரிய கோயில் மீட்புக் குழுவின் முயற்சியால் ஆழ்துளைக் கிணற்று வேலை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது !! ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி , நான்குபுறமும் அகழிகளால் சூழப்பட்டு , கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் !!இவ்வளவு பெரிய கோவிலுக்கு மணலைக் கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேசப் பொறியாளர்கள் என்ன முட்டாள்களா?

அந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது !!

அகழிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் , காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் , இந்த ஆலயம் மணல்பரப்பின் மீதுஅமைக்கப்பட்டிருப்பதால் , தன்னுடைய நிலை தடுமாறினாலும் , தானே தன்னை நேராக்கிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது !! இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள் !!

அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ , அதே போல பெரிய கோவிலும் , எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் , தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் !!சோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு உலகில் வேறு எவரும் ஈடாக மாட்டார்கள் என்பதற்கு இது ஒன்று மட்டுமே சான்று !

கட்டிடக்கலையின் அதிசயமாக இருக்கக்கூடிய , தன்னைத் தானே நேராக்கி கொள்ளும் தஞ்சை பெரியகோவில் கோபுரம், பிரகதீஸ்வரர் ஆலயம் , தமிழர்களின் அடையாளத்தைக் காட்டுகிறது. இறைவன் ஆசியுடன் நம் முயற்சியில் இந்தத் தகவலை உலகறியச் செய்வோம் !!

 

 

No comments:

Post a Comment