Friday, March 10, 2023

இன்ப்ளூயன்சா H3N2


இன்ப்ளூயன்சா  H3N2


  இன்ப்ளூயன்சா வகை வைரஸின் H3N2 திரிபு வைரஸ் தற்போது நமது நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது

அதீத காய்ச்சல் (101 டிகிரி ஃபாரன்ஹீட்களுக்கு மேல்தொண்டை வலி  விடாத வறட்டு இருமல்  குமட்டல் / வாந்தி  உடல் வலி / சோர்வு   தலைவலி போன்றவை இந்த வைரஸ் தொற்றின்  அறிகுறிகளாக இருக்கின்றன

ஐசிஎம்ஆர் ஆய்வுகளின் படி  இந்த தொற்றினால்  எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள் , முதியோர்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் நோய் வெளிப்பட வாய்ப்பு உண்டு

மேற்சொன்ன அறிகுறிகளுடன்

மூச்சுத்திணறல் , மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி , எதையும் சாப்பிட முடியாத அளவு சுணங்கிக் கிடப்பதுதலைசுற்றல், வலிப்பு  போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்

மீண்டும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும் 95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.  90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்

சுய மருத்துவம் ஆபத்தானதுபொன்னான நேரத்தை சுயமருத்துவம் செய்து கழிப்பது தவறுகுழந்தைகள் முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல்  இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும் 

 

அடுத்த சில வாரங்களுக்கு  எதிர்ப்பு சக்தி குன்றிய முதியோர் குழந்தைகளை அத்தியாவசியமின்றி வெளியில் கூட்டமான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது  அத்தியாவசியமற்ற பயணங்களை சற்று தள்ளிப்போடுவது சிறந்தது 

பொது இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவது  தொற்றுப் பரவலை தடுக்கும் சிறந்த நடைமுறை  தொற்று ஏற்பட்டு காய்ச்சலுடன் இருப்பவர் காய்ச்சல் குணமாகும் மட்டுமேனும் வீட்டில் தம்மை தனிமைப் படுத்திக் கொண்டால் தொற்றுப் பரவலை தடுக்க இயலும்  கைகளை சோப் போட்டு  அடிக்கடி கழுவ வேண்டும். எச்சிலை பொது இடங்களில் துப்பக் கூடாது

இந்த வைரஸ்க்கு எதிராக வேலை செய்யும் வைரஸ் கொல்லி மருந்துகள் குறிப்பாக ஒசல்டாமிவிர் நம்மிடம் இருக்கிறது. எனினும் தீவிர நோய்  ஏற்பட்டிருப்பவர்களுக்கு மட்டுமே வைரஸ் கொல்லி மருந்துகள் போதுமானது. சாதாரண தொற்று நிலையில் இருப்பவர்களுக்கு பன்றிகாய்ச்சல் எதிர்ப்பு வைரஸ் கொல்லி மருந்து தேவையில்லை

இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக்  கொல்லும்  ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது

காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் மருந்து  மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகள்  குளிர்ந்த நீரில் உடல் முழுவதும் ஒத்தி எடுப்பது  நீர்ச்சத்து நிரம்பிய ஆகாரங்களை உட்கொள்ளுதல்  .ஆர். எஸ் திரவத்தைப் பருகுதல்  நல்ல ஓய்வு  இந்த தொற்றில் இருந்து மீள உதவும் 

குழந்தைகள் முதியோர்கள் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு தொற்று அறிகுறிகளில் அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக செயலில் இறங்கி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்

பெரும்பான்மையினருக்கு சாதாரண சீசனல் ஜுரமாகக் கடந்து செல்லும் தொற்று இது  இது குறித்து அதிக அச்சம் தேவையில்லை எனினும் எச்சரிக்கை செய்வதற்கே இப்பதிவு  எச்சரிக்கையுடன் இருப்போம்  எதிர்வரும் சவாலை வெல்வோம்

 

No comments:

Post a Comment