பிஸ்கட்
நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம்... அஞ்சி காசுக்கு மூணு....
65- 85 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்...
செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார்.
ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி பள்ளி யூனிபார்ம் காக்கி டவுசரின் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம்,
வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கொவுந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு..
தினமும் அன்னதானம் ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை குடியாத்தம்
சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்...
நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்...
பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமை, ஒத்த பைசா பிஸ்கட் மறக்கபட்டும், மறைக்கபட்டும் உள்ளது. ( இந்த பிஸ்கட் ஒரு சில இடங்களில் இப்போதும் உள்ளது)
ஒத்த பைச பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான்..
No comments:
Post a Comment