தங்கத்தின் தூய்மை மற்றும் நிற வழிகாட்டி:
24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்திற்கு இடையிலான வேறுபாடு என்ன
தங்கத்தின் பல்வேறு காரட்கள்
காரட் என்பது தங்கத்தின் அளவு அல்லது தூய்மையை அளவிடப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். நாம் 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்திற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்வதற்கு முன், காரட் எதைக் குறிக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். காரட் என்பது பொதுவாக தங்கத்தின் தூய்மையை அளவிட பயன்படுத்தப்படும் ஒரு அலகு ஆகும். காரட் அதிகமாக இருந்தால், தங்கத்தின் தூய்மையும் அதிகமாக இருக்கும். 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்திற்கு இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்வதற்காக இங்கு ஒரு எளிய வழிகாட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
24 காரட் தங்கம்
24 காரட் தங்கம் என்பது சுத்தத் தங்கம் அல்லது 100 சதவீதம் தங்கம் என அழைக்கப்படுகிறது. அதாவது தங்கத்திலுள்ள 24 பாகங்களும் வேறு எந்த உலோகங்களின் கலப்பும் இல்லாமல் முழுவதும் சுத்தத் தங்கமாக இருக்கிறது என்று அர்த்தமாகும். இது 99.9 சதவிகிதம் தூய்மையானதாக அறியப்படுகிறது மற்றும் ஒரு தெளிவான பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. நீங்கள் 25 காரட் அல்லது 26 காரட் தங்கம் எனக் கூறி விற்பனை செய்யும் வியாபாரியிடம் செல்வதற்கு முன் 24 காரட்டை விட உயர்ந்த தங்க வடிவம் கிடையாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இது தங்கத்தின் தூய்மையான வடிவம் என்பதனால், 22 காரட் அல்லது 18 காரட் தங்கத்தை விட இதன் விலை இயல்பாகவே அதிகமாகும். ஆனாலும், மென்மையாகவும் நெகிழ்வாகவும் காணப்படும் குறைவான காரட் தங்கத்துடன் இவ்வகை தங்கத்தை ஒப்பிடும் போது அடர்த்தி குறைவானதாகவே இருக்கிறது. எனவே, இது வழக்கமான நகை வடிவங்களுக்கு பொருத்தமாக இருப்பதில்லை. நாணயங்கள் மற்றும் கட்டிகள் பெரும்பாலும் 24 காரட் தூய தங்கத்திலேயே வாங்கப்படுகின்றன. காதின் மையத்தில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதாக பயன்படுத்ப்படும் தங்க டிம்பினஸ்டோமி (tympanostomy) குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள காது நோய்த்தொற்றினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பயன்டுத்துதல் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவ சாதனங்களிலும் 24 காரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
22 காரட் தங்கம்
22 காரட் தங்க நகை என்பது நகையின் 22 பாகங்கள் தங்கத்தால் ஆனவை என்பதையும் மீதமுள்ள 2 பாகங்கள் வேறு சில உலோகங்களால் ஆனவை என்பதையும் குறிக்கின்றன. இவ்வகையான தங்கம் பொதுவாக நகைகளில் பயன்படுத்தப்படுகிறது. 22 காரட் தங்கத்தில், 100 சதவீதத்தில் 91.67 சதவீதம் மட்டுமே தங்கமாகும். மீதமுள்ள 8.33 சதவீதம் வெள்ளி, துத்தநாகம், நிக்கல் மற்றும் பிற உலோகக் கலவைகளால் ஆனவையாகும். இந்த உலோகங்களை சேர்ப்பதனால் தான் தங்கத்தின் கட்டமைப்பு கடினமாகிறது, இது நகையை நீடித்து உழைக்கச் செய்கிறது. ஆனாலும், இது சாதாரண தங்க நகைகளைச் செய்ய பயன்படுத்தப்பட்டாலும், 22 காரட் தங்கமானது வைரங்கள் மற்றும் கனமான பொருட்கள் பதித்த நகைகளுக்கு உகந்ததல்ல.
18 காரட் தங்கம்
18 காரட் தங்கம் என்பது 75 சதவிகித தங்கம் செம்பு அல்லது வெள்ளி போன்ற 25 சதவிகித பிற உலோகங்களுடன் கலந்த கலவையாகும். வழக்கமான பதிக்கப்பட்ட நகைகள் மற்றும் பிற வைர நகைகள் 18 காரட் தங்கத்தில் செய்யப்படுகின்றன. இந்த வகையான தங்கமானது 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்துடன் ஒப்பிடும் போது விலை குறைந்ததாகவே இருக்கிறது. இது சற்று மந்தமான தங்க நிறத்தில் காணப்படுகிறது. 18 காரட் நகைகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகும். இந்த நகைகள் 18K, 18Kt, 18k அல்லது இதேபோன்ற மாறுபாடுகளுடன் முத்திரையிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சில நேரங்களில், நகையில் 75 சதவீதம் மட்டுமே தங்கம் உள்ளது என்பதை குறிப்பிட 18 காரட் தங்கத்தில் 750, 0.75 அல்லது இதுபோன்ற முத்திரையிடப்படுகின்றன.
தூய்மை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
மேற்கில் காரட் தூய்மையில் கூறப்படுகிறது. எ.கா. 24 காரட் தங்கமானது 1000 தூய்மையில் 1000 பாகங்களாக அல்லது தூய்மை 1.000 ஆக கூறப்படுகிறது. 22 காரட் என்பது 22 -ஐ 24 ஆல் வகுத்து 1000 ஆல் பெருக்கினால் கிடைப்பதை குறிப்பிடுகிறது, இது உங்களுக்கு 0.9166 என்ற தூய்மை நிலையை கொடுக்கும். 21 காரட் என்பது 21 -ஐ 24 ஆல் வகுத்து 1000 ஆல் பெருக்கினால் கிடைப்பதை குறிப்பிடுகிறது, இது உங்களுக்கு 0.875 என்ற தூய்மை நிலையை கொடுக்கும் மேலும் இது போலவே 18 காரட்டுக்கும் செய்யப்பட்டு 0.750 என்ற தூய்மை நிலை கிடைக்கிறது.
தங்கத்தின் பல்வேறு நிறங்கள்
24 காரட் தங்கம் தூய தங்கத்தின் இயற்கையான பொன் நிறத்தைப் பெற்றுள்ளது மற்றும் அதன் தூய்மையை 24 காரட்டுக்கு குறைவாக மாற்றாமல் அதன் நிறத்தை மாற்ற முடியாது. நகைகளை செய்யும் போது உலோகக் கலைவையை மாற்றுவதன் மூலம் தங்கத்தை பிற நிறங்களுக்கு மாற்றலாம். உதாரணமாக தங்கத்தின் உலோகக் கலவையில் அதிக தாமிரம் சேர்க்கப்பட்டு இளஞ்சிவப்பு தங்கம் தயாரிக்கப்படுகிறது. இதேபோல துத்தநாகம் மற்றும் வெள்ளி அதிகமாக சேர்க்கப்பட்டு பச்சை நிற தங்கமும் நிக்கல் அதிகமாக சேர்க்கப்பட்டு வெள்ளை நிற தங்கமும் தயாரிக்கப்படுகின்றன. மின்முலாம் பூசுவதன் மூலம் தங்கப் பொருட்களின் மேற்பரப்பிற்கு நிறம் கொடுக்கலாம். ஆனாலும், இது ஒரு மேற்பரப்பு பூச்சாகவே இருக்கும் மற்றும் காலப்போக்கில் இது தேய்ந்து போகும்.
24 காரட் தங்கத்தில் 24 பாகங்கள் தூய தங்கத்தை கொண்டிருக்கின்றன. 22 காரட் தங்கத்தில் 22 பாகங்கள் தங்கமாகவும் 2 பாகங்கள் பிற உலோகங்களாகவும் இருக்கின்றன. 21 காரட் தங்கத்தில் 21 பாகங்கள் தங்கமாகவும் மூன்று பாகங்கள் பிற உலோகங்களாகவும் இருக்கின்றன. 18 காரட் தங்கத்தில் 18 பாகங்கள் தூய தங்கமாகவும் 6 பாகங்கள் பிற உலோகங்களாகவும் இருக்கின்றன. மேற்கில் காரட் தூய்மையில் கூறப்படுகிறது. எ.கா. 24 காரட் தங்கமானது 1000 தூய்மையில் 1000 பாகங்களாக அல்லது தூய்மை 1.000 ஆக கூறப்படுகிறது. 22 காரட் என்பது 22 -ஐ 24 ஆல் வகுத்து 1000 ஆல் பெருக்கினால் கிடைப்பதை குறிப்பிடுகிறது, இது உங்களுக்கு 0.9166 என்ற தூய்மை நிலையை கொடுக்கும். 21 காரட் என்பது 21 -ஐ 24 ஆல் வகுத்து 1000 ஆல் பெருக்கினால் கிடைப்பதை குறிப்பிடுகிறது, இது உங்களுக்கு 0.875 என்ற தூய்மை நிலையை கொடுக்கும் மேலும் இது போலவே 18 காரட்டுக்கும் செய்யப்பட்டு 0.750 என்ற தூய்மை நிலை கிடைக்கிறது.
வாங்குபவருக்கான ஆலோசனை
24 காரட் = 100% தங்கம் அல்லது சுத்தத் தங்கம்
22 காரட் = 91.7 % தங்கம்
18 காரட் = 75.0 % தங்கம்
14 காரட் = 58.3 % தங்கம்
12 காரட் = 50.0 % தங்கம்
10 காரட் = 41.7 % தங்கம்
No comments:
Post a Comment