ஆண் ஜென்மம்
வருஷம் ரெண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கும் . ஜட்டி பனியனில் பாச்சா ,எலி பூனை போரளவுக்கு ஓட்டை இருந்தாலும் மாத்த நினைக்காது.
ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பாக்காது .வருஷம் ரெண்டு தடவை மட்டும் கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி குடுக்கும்.
ஒரு நல்ல செருப்பு வாங்காது ஆனால் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் மனைவி குழந்தைகளுக்கு கொலுசு மாத்தி கொடுக்கும்.
வாரம் மூணு நாளும் அஞ்சு நாளும் கூட வெளியே வேலை பார்த்துட்டு வார லீவுல கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கள் கிழமை காலையிலே பிள்ளைகள்ட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம்.
ரெண்டாயிரம் ,மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு மூணு பேண்ட் 1000
ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து நிக்கும் .
காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம் ,பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிக்கும் .
35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும், சமையல் நிகழ்ச்சி பார்க்க மனைவிக்கு
15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்துட்டு 1000 ரூவா பட்டன் செல் தேஞ்சு போனதை உத்து பாத்து நம்பர் அமுக்கும் .
கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிக்கும்.முன்னாடி பளிச்சுன்னும் பின்னாடி புளிச்சுன்னும் இருக்கும் .மீசையிலே அடிச்சு அனுமார் வாயாட்டம் இருக்கும் .
நல்ல வேளை மாஸ்க் காப்பாத்துது
5 ரூபாய் ப்ளேடை வச்சு தோல் பிஞ்சு போறளவுக்கு 10 தடவைக்கு வறட்டு வரட்டுன்னு ஷேவிங் பண்ணும் .
அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிக்கும் .ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடும் .20 ரூபாய் சில்லறை எந்நேரமும் வச்சுருக்கும்.
இதெல்லாம் என்ன ஜென்மமோ ?
இதில் நிறையவே உண்மை உள்ளது. ஆண்களிலும் பலர் இப்படித்தான்...
No comments:
Post a Comment