பேஸ்புக் பெண்
இரவு 10 மணிக்கு மேல ஆன்லைன்ல இருக்கிற பொண்ணுங்க தப்பான பொண்ணுங்கன்னு சில ஆண்களோட நினைப்பு.. இன்பாக்ஸ்ல போய் தப்பா மெசேஜ் பண்றது... எவ்வளவு பேர் பாதிக்க பட்டிருக்காங்கன்னு தெரியவில்லை...
பேஸ்புக் பெண் ஒருவனிடம் ஒருத்தன் 10 மணிக்கு மேல மெசேஜ் பண்ணி இருக்கான். இவங்க ரிப்ளை பண்ணல. தப்பா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்கான்.. அதுக்கு இவங்க 'தம்பி கொஞ்சம் மரியாதையா பேசு.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை'ன்னு...
அதுக்கு 'அவன் 10 மணிக்கு மேல ஆன்லைன்ல இருக்கிற.. எவன் கூட கொஞ்சிட்டு இருக்கியோ.. உனக்கென்னடி மரியாதைன்'னு சொல்லி இருக்கான்...
அவங்க அழுதுகிட்டே அவனை பிளாக் பண்ணிட்டு பேஸ்புக்கை டி-ஆக்டிவேட் பண்ணிட்டாங்க..
டேய் பசங்களா.. பொண்ணுங்க ஏன் 10 மணிக்கு மேல ஏன் பேஸ்புக் வறாங்கன்ற காரணத்தை சொல்றேன்...
அவங்க புருஷன் வெளி நாட்டுல இருக்கலாம்.. அங்க 11 மணின்னா இங்க 8.30 மணி. அவங்க புருஷன் கூட 'ஐஎம்ஓ'ல பேசிகிட்டு இருக்கலாம். அவங்க கிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.
ஏதாவது பங்சன் வீட்ல இருக்கலாம்...
டிராவல் பண்ணிட்டு இருக்கலாம்...
ஆன்லைன்ல ஏதாவது ஸ்டோரி படிச்சிட்டு இருக்கலாம்....
வீட்டு வேலை முடிச்சிட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நல்ல போஸ்ட்க்கு லைக் பண்ணிட்டு இருக்கலாம்....
வேலைக்கு போன புருஷன் வர லேட்டானா தூங்காம இருக்க பேஸ்புக் பார்த்துகிட்டு இருக்கலாம்....
சமையல் குறிப்பு பார்த்திட்டு இருக்கலாம்...
நண்பர்களோடு அண்ணன் தம்பியோட பேசிட்டு இருக்கலாம்...
தூக்கம் வராம மனசு கஷ்டத்துல பேஸ்புக் வரலாம்...
படிக்குற பொண்ணுங்க தூக்கம் வராம இருக்க அப்பப்போ பேஸ்புக் வந்திட்டு போகலாம்...
இப்படி எவ்வளவோ இருக்கு... உங்க கிட்ட பேசணும்னு எந்தவொரு கட்டாயமும் இல்லை...
பொண்ணுங்களுக்கு முதல்ல மரியாதை குடுக்க கத்துக்கோங்க... அவங்களுக்கு உடம்பு மட்டுமில்ல உணர்வுகளும் மனசும் இருக்கு புரிஞ்சுக்கோங்க....
உங்களை மாதிரி ஆளுங்களால தான் பேஸ்புக்னாலே பொண்ணுங்க பயபடுறாங்க.... இப்படி பட்டவங்களை பிளாக் பண்ணிட்டு உங்க வேலையை பாருங்க நீங்க.... 100 நல்லவங்க இருந்தா 10 கெட்டவங்க இருக்க தான் செய்வாங்க....
பெண்களை மதிக்கும் ஆண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்....
No comments:
Post a Comment