மேகமலை
இயற்கை எழில் கொஞ்சும் "உயர் அலை அலையான மலைகள்" சூழ்ந்த அழகிய சுற்றுலா தலம்
·
மேகமலை தேனி மாவட்டத்தில் (சின்னமனூர் அருகில்) மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மிக அழகான, அமைதியான மலைப்பிரதேசம்.
·
எப்போதும் மேகங்கள் சூழ்ந்து தவழ்ந்து கொண்டிருப்பதால் இதற்கு
"மேகமலை" என்று பெயர் வந்தது.
·
இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப்பகுதி "உயர் அலை அலையான மலைகள்"
(Highwavys Mountains) என்றும் அழைக்கப்படுகிறது.
·
இது 'ஹைவேவிஸ்' என்றும், 'பச்சை குமாச்சி' என்றும் அழைக்கப்படுகிறது
மகாராஜா மெட்டு
·
மேகமலையின் மிக உயர்ந்த வியூ பாயிண்ட் இது.
·
இங்கிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களின் 270
டிகிரி பிரம்மாண்டக் காட்சியை ரசிக்கலாம்.
ஹைவேவிஸ் அணை மற்றும் ஏரி:
·
மேகமலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அழகான ஏரி மற்றும் அணைப்பகுதி மாலை நேரங்களில் நடப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் மிகவும் உகந்தது.
·
மணலாறு அணை, இரவங்கலாறு அணை என மொத்தம் ஐந்து சிறிய அணைகள் இப்பகுதியில் உள்ளன.
மேகமலை வனவிலங்கு சரணாலயம்:
·
இது ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதி.
·
அதிர்ஷ்டம் இருந்தால் இங்கு யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் பல அரிய வகை பறவைகளைக் காண முடியும்.
சின்ன சுருளி நீர்வீழ்ச்சி:
·
மேகமலை அடிவாரக் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மூலிகை நீர்வீழ்ச்சி.
·
அடர்ந்த காடுகளுக்கு இடையே கொட்டும் இந்த அருவியில் குளிப்பது அலாதியான அனுபவம்.
செக்போஸ்ட் நேரம்:
·
மேகமலை வனத்துறை செக்போஸ்ட் காலை 6:00 மணி முதல் மாலை
5:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
·
அதற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மேலே செல்லவோ அல்லது கீழே வரவோ அனுமதியில்லை.
·
சின்னமனூரிலிருந்து 18 கொண்டைஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
·
இங்கு மற்ற கமர்ஷியல் மலைப்பிரதேசங்கள் போல அதிக கடைகளோ, உணவகங்களோ அல்லது ஏடிஎம்
(ATM) வசதிகளோ கிடையாது. எனவே தேவையான தின்பண்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே எடுத்துச் செல்வது நல்லது.
No comments:
Post a Comment