Followers

Thursday, November 5, 2026

ஆவுடையார் கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோயில்

ஆவி மட்டுமே நைவேத்தியம், காற்று வீசும்போது கல் அசையும்,'அரூபமாக' சிவபெருமான்,அம்பாள் பாத முத்திரை மட்டுமே வழிபாடு - ஆவுடையார் கோயில் 



·         புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் அமைந்துள்ள ஆவுடையார் கோயில் (ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோயில்), தமிழகக் கட்டடக்கலை மற்றும் ஆன்மீக வரலாற்றில் ஒரு வியக்கத்தக்க அதிசயம்.

·         வழக்கமான சிவன் கோயில்களில் இருப்பது போன்ற லிங்க வடிவமோ அல்லது நந்தியோ, கொடிமரமோ, சண்டிகேஸ்வரரோ இங்கு கிடையாது.

·         மூலஸ்தானத்தில் சிவபெருமானின் பீடமான ஆவுடையார் மட்டுமே இருக்கும். அதன் மேல் ஒரு குவளை (கீழ்நோக்கி கவிழ்த்த பாத்திரம்) வைக்கப்பட்டு, இறைவனை 'அரூபமாக' (உருவமில்லாத ஆன்மாவாக - ஆத்மநாதராக) வழிபடுகின்றனர்.

·         அம்பாள் யோகாம்பிகை சன்னதியிலும் உருவம் கிடையாது, வெறும் பாத முத்திரை மட்டுமே வழிபடப்படுகிறது.

·         இக்கோயிலின் மண்டபக் கூரையின் வெளிப்புற நீட்சியாக இருக்கும் 'கொடுங்கை' - தாழ்வாரக் கூரை (சன்ஷேட்) பகுதி, இரும்போ மரமோ இன்றி முழுக்க முழுக்கக் கருங்கல்லால் செதுக்கப்பட்டது

·         மரப்பலகைகளை நட்டு, ஆணி அடித்து இணைத்தது போலவும், மிக மெல்லிய ஓடுகளைப் பதித்தது போலவும் கல்லிலேயே தத்ரூபமாகச் செதுக்கியுள்ளனர்.

·         இதன் மெல்லியம் காரணமாக, பலத்த காற்று வீசும்போது இந்த கல் கொடுங்கையின் சில பகுதிகள் லேசாக அசையும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது இன்றளவும் புரியாத புதிராக உள்ளது.

·         இங்கு இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதமும் ஒரு விசித்திர வழிபாடாகும்.

·         கருவறையின் மூலவர் முன்புள்ள அமுத படைக்கல்லில் (திட்டுக்கல்) சுடச்சுடச் சமைக்கப்பட்ட புழுங்கல் அரிசி சாதத்தைக் கொட்டுவார்கள்.

·         கல் தளத்தில் கொட்டி, அதிலிருந்து எழும் ஆவியை (புகையை) மட்டுமே இறைவனுக்கு நைவேத்தியமாக அர்ப்பணிக்கிறார்கள்.

  

No comments: