Followers

Friday, November 27, 2026

உலக இட்லி தினம்

உலக இட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?



·         இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மக்கள்.

·         அந்த வகையில் உலக இட்லி தினம் மார்ச் 30 இல் கொண்டாடப்படுகிறது.

·         உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும்

·         தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெரும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும்..

·         இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.

·         தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. அரிசி, உளுத்தம் பருப்பு கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி.

·         இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

·         இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

·         இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு,

·         இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

No comments: