Followers

Friday, November 27, 2026

காவி

 இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் காவி - பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விலகி அடர்ந்த காடுகள், பனிமூட்டமான மலைகள்,வனவிலங்குகள்,ஜீப் சவாரி,ட்ரெக்கிங்,நீர்வீழ்ச்சி என இயற்கையோடு இணைய



·         கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள, காவி - இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் ஒரு மிக அழகான சுற்றுலாத் தலம்

·         அடர்ந்த காடுகள், பனிமூட்டமான மலைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த இந்த இடம், பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியைத் தேடுபவர்களுக்கு காவி ஒரு சொர்க்கமாகும்.

ஜீப் சவாரி

·         அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் 50 கி.மீ க்கும் அதிகமான ஜீப் சவாரி மிகவும் சிலிர்ப்பானது.

·         வழியில் யானைகள், காட்டு எருமைகள், சிங்கவால் குரங்குகள் போன்ற விலங்குகளைக் காண வாய்ப்புள்ளது.

படகு சவாரி

·         காவி ஏரியின் அமைதியான நீரில் துடுப்புப் படகு சவாரி செய்வதும், காட்டின் நடுவே உள்ள மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதும் மறக்க முடியாத அனுபவம்.

நடைபயணம் (Trekking):

·         அனுபவம் வாய்ந்த வனத்துறை வழிகாட்டிகளுடன் சபரிமலை வியூ பாயிண்ட் அல்லது சாத்ரம் புல்வெளிகளுக்கு சாகச நடைபயணம் செல்லலாம்.

·         மலையேற்றம் (ட்ரெக்கிங்) அனுமதிக்கப்படுகிறது

ஏலக்காய் தோட்ட உலா:

·         காட்டில் இயற்கையாக வளரும் ஏலக்காய் தோட்டங்களுக்குள் நடந்து சென்று அதன் நறுமணத்தை ரசிக்கலாம்.

அனுமதி

·         காவி ஒரு பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகப் பகுதி என்பதால், இங்கு செல்ல வனத்துறையின் நுழைவு அனுமதி கட்டாயம் தேவை.

·         தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

·         கேரள வன மேம்பாட்டுக் கழகத்தின் (KFDC official website) இணையதளத்தில் நாள் பேக்கேஜ் (Day Package) அல்லது தங்கும் பேக்கேஜ் (Stay Package) மூலமாக மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்து செல்ல முடியும்.

·         இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கார் அல்லது ஜீப் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.

·         தேக்கடி/குமளியில் இருந்து வண்டிபெரியார் வழியாக வள்ளக்கடவு செக்போஸ்ட் மூலமாக காவிக்கு செல்லலாம்.

No comments: