70- 90ஸ் கிட்ஸ் பேவரைட் தேன் மிட்டாய்
·
சிறுவயதிலே நாம் ரசித்து ருசித்த பல தின்பண்டங்களில் மறக்க முடியாத ஒரு தின்பண்டம் தான் இந்த தேன் மிட்டாய்.
·
தேன் மிட்டாய் 90-ஸ் கிட்ஸ் பலரின் சிறுவயது நினைவுகளைத் தூண்டும் ஒரு பாரம்பரிய தின்பண்டம்.
·
அரிசி மற்றும் உளுந்து மாவில் செய்யப்பட்டு, சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்படும் இந்த மிட்டாய், வாயில் வைத்ததும் ஒன்று போதாது என மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.
·
சர்க்கரைப் பாகால் செய்யப்பட்ட மிட்டாய் என்றாலும் அதனை தேன் மிட்டாய் என்று தான் சொல்வோம்.
·
வெளிர் சிவப்பு நிறத்தில், உருண்டையாக இருக்கும் தேன் மிட்டாய் சர்க்கரை பாகில் ஊறி, ஒவ்வொரு கடியிலும் இனிப்புத் தேன் போலச் சாறு வெளிப்படும்.
·
பள்ளிக்கூட வாசல்களில் உள்ள பெட்டிக்கடைகளில் 50 காசு, 1 ரூபாய்க்கு வாங்கி மகிழ்ந்த நாட்கள், தேன் மிட்டாயின் சுவையுடன் இணைந்த இனிய நினைவுகள் என்றும் நினைவில் நிற்கும்.

No comments:
Post a Comment